“தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!

நடிகர் விதார்த் நடித்த “தொடக்கம்” திரைப்படம், Son of Wind Studios தயாரிப்பில், மார்ச் 2ஆம் தேதி பாரம்பரிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மனதை உருக்கும் மற்றும் உணர்ச்சி பூர்வமான திரை அனுபவத்தை வழங்கவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் சிறப்பான தொடக்கமாக இவ்விழா அமைந்தது. குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இந்தப்படம், மனித வாழ்க்கையை வடிவமைக்கும் உறவுகள், உணர்வுகள் மற்றும் நுண்ணிய பாசப்பிணைப்புகளை ஆழமாக ஆராய்கிறது. நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான உணர்ச்சி ஆழமும் கொண்ட இப்படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகிறது. இந்தப் படத்தில் திறமையான நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர்: சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா மற்றும்…

Read More

நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நெட்ஃபிலிக்ஸின் ’மேட் இன் கொரியா’ குழுவினர் எம்சிசி கல்லூரி மாணவர்களுடன் கொரியன் வார்த்தை விளையாட்டை (Korean Word Game) கலகலப்பாக விளையாடினர்!

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மேட் இன் கொரியா’ படக்குழுவினர் இன்று சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கொரிய மொழி வார்த்தை விளையாட்டு மற்றும் ’திஸ் ஆர் தட்’ (This or That) போன்ற ஃபன் விளையாட்டுகள் விளையாடி மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினர். ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது.

Read More

‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ – திரைப்பட விமர்சனம்

12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வினோதமான ஆசை கொண்ட நாயகன் பால்ராஜ், அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு 6 குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். அவரது 6 குழந்தை ஆசைக்கு சம்மதம் தெரிவித்ததால் காயத்ரி ரெமாவை மணக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு காயத்ரி ரெமா, ஒரு குழந்தை போதும், அதற்கு மேல் குழந்தை வேண்டாம், என்ற முடிவுக்கு வர, பால்ராஜ் மட்டும் 6 குழந்தை ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான கணவரால் தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கும் சுவேதா ஸ்ரீக்கும், பால்ராஜுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாற, கணவன்,…

Read More

ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!

ZEE5-ல் பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது ! இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும் ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான **‘பூக்கி’**படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். ‘பூக்கி’ திரைப்படம், பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர்…

Read More