கதை..
ஒரு விபத்தில் தங்கள் பெற்றோரை இழக்கின்றனர் பாவணர் மற்றும் அவரது தம்பி.. இதனால் மனதளவில் கடுமையாக இருவரும் பாதிக்கப்படுகின்றனர்..
தன்னுடைய தம்பி தான் உலகம் என்று அவருக்காகவே வாழ்ந்து வருகிறார் பாவனா.. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ஒரு மரணம் நிகழ்கிறது.. அது தற்கொலை என்று போலீஸ் ரகுமான் தரப்பு சொல்ல ஆனால் பாவனாவுக்கு மரணம் மீது சந்தேகம் வருகிறது..
சில தினங்களில் இதே மாதிரியே பாவனாவின் தம்பியும் இறக்கிறார்.. இதனால் இவரது சந்தேகம் மேலும் தீவிரமடைகிறது.
இந்த சூழ்நிலையில் அடுத்ததாக ஒரு இளம் பெண்ணும் மரணம் அடைகிறார்.. இதை காவல்துறை அவர்கள் தற்கொலை மன நிலையில் இருந்தார்கள் என்று விசாரணையில் சொல்கிறார்கள்..
ஆனால் பாவனாவுக்கு சந்தேகம் தீராத நிலையில் இவரும் அந்த விசாரணை இறங்குகிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதுதான் அதிர்ச்சியான சம்பவங்கள்..
நடிகர்கள்…
நீண்ட நாள் கழித்துப் பிறகு தமிழ் திரையில் பாவனாவை காண முடிகிறது அதை அழகான நடிப்பில் கவர்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது கேரக்டர் பெரிய திருப்புமுனையை எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது..
விசாரணையில் எந்த தடயமும் கிடைக்காத காவல் அதிகாரியாக ரகுமான்.. ஆனால் ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்து விசாரணையை முடித்துவிடும் காட்சியில் கைத்தட்டலை அள்ளுகிறார்.
பாவனாவின் தம்பியாக ஷெபின் பென்சன், காதல் நண்பனாக அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா உள்ளிட்ட பலரின் கேரக்டரும் படத்திற்கு மிகப்பெரிய பலம்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங்.. தன்னுடைய கேமரா கைவண்ணத்தை ஒவ்வொரு காட்சியிலும் காட்டி இருக்கிறார்.. அவ்வளவு அழகு..
ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசை.. பின்னணியில் ஒரு திரில்லருக்கான படபடப்பை உண்டாக்குகிறது.. கதைக்கு ஏற்ப இரைச்சலில்லாமல் இசையை கொடுத்திருப்பது சிறப்பு..
இயக்குநர் – ரியாஸ் மரத்.. பெரும்பாலும் இது போன்ற கதைகள் இந்திய சினிமாவுக்கு புதுசு என்று சொல்லலாம்.. மரணம் நிகழப் போகும் அந்த கடைசி தருணத்தில் ஒரு மனிதன் உணர்வுக்குள் நடக்கும் மாற்றங்களை வித்தியாசமான கற்பனைகள் சொல்லி இருப்பது சிறப்பு..
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் ஒரு திரில்லர் அனுபவத்தை இந்த அனோமி கொடுக்கும் என நம்பலாம்..

