புதிய எழுத்தாளர்களுக்கு ஓர் மேடையாக ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ தளம்: ரிபெல் ஸ்டார் பிரபாஸ் துவக்கி வைத்தார்!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் பிரபாஸ், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார். பல தரப்பட்ட கதைகள் வெளிச்சத்திற்கு வரவும், எழுத்தாளர்கள் தங்கள் கதை சார்ந்த  கருத்துக்களை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், ஒரு  சிறப்பான தளத்தை வழங்குவதற்காக,  இந்த முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட் கிராஃப்ட்  தளத்தில் எழுத்தாளர்கள் தங்கள் கதைக்கருக்களை 250-சொற்களில் சுருக்கமாக சமர்ப்பிக்கலாம்.  பார்வையாளர்கள் இந்த கதைக்கருக்களை படித்து மதிப்பிடலாம், அதிக ரேட்டிங் பெற்ற கதைகள் மேலே உயரும். இதன் பின்னூட்ட அமைப்பு, கருத்துக்களுக்குப் பதிலாக மதிப்பீடுகளில் கவனம் செலுத்துகிறது, எழுத்தாளர்கள் நம்பிக்கையை வளர்க்கவும் அவர்களின் கருத்துக்களுக்கு நேர்மறையான ஆதரவைப் பெறவும் உதவும் ஒரு ஆக்கபூர்வமான சூழலை  இந்த தளம் உருவாக்குகிறது. “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் ” இணையதளத்தை துவக்கத்தை கொண்டாடும்…

Read More

நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி: அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். #நிவின்பாலி

நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார், இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

Read More

நமித் மல்ஹோத்ரா, இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்: ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு,  2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!

இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!* ரசிகர்களே வலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்! புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான நித்தேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், “ராமாயணம்”, இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியர்த்தில் ஆழ்த்தவுள்ளது.! இந்த காவிய திரைப்படம், இந்தியாவின் மிகவும் நேசத்துக்குரிய கதையினை  மிகப்பிரம்மாண்டமாக தொலைநோக்கு கதைசொல்லலுடன் திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது. பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோவின் தொலைநோக்கு சக்தியாக, நமித் மல்ஹோத்ரா ஹாலிவுட்டின் சில பெரிய திரைப்படங்களில்  பணிபுரிந்துள்ளார், இதில் டுயூன், இன்செப்ஷன் மற்றும் தி கார்பீல்ட் மூவி போன்ற சமீபத்திய வெற்றித் திரைப்படங்களும் அடங்கும். கூடுதலாக, அவர் ஆங்க்ரி ஃபேர்ட்ஸ் 3ஐயும் சமீபத்தில்  அறிவித்துள்ளார். நமித் மல்ஹோத்ராவின் கதைசொல்லல் பற்றிய ஆழமான புரிதல் அவரை…

Read More

‘கேம் சேஞ்சர்’ ஆரம்பம் தான்.. தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் மாஸ் அப்டேட்

இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் திரு. ஆதித்யாராம் இணைந்து தயாரித்துள்ளனர். ‘கேம் சேஞ்சர்’ படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக ‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர் தில்…

Read More

ஓவியா உடன் ஹர்பஜன் சிங் நடிக்கும் தமிழ் படம்… உங்கள் அன்புக்காக வெயிட்டிங்!!

ஷான்டோவா ஸ்டுடியோ 2019-இல் அக்னி தேவி மற்றும் 2021-இல் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் ‘ஜான் பால்ராஜ்’ தயாரித்து இயக்கும், ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும், தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ‘ஹர்பஜன் சிங்’ கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்கு ‘சேவியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிமுகமும் சமூக வலைதளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 05:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.   இத்திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் ‘டாக்டர்.ஜேம்ஸ் மல்ஹோத்ரா’ மற்றும் ஓவியா ‘வர்ணா’ என முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர். GP முத்து ‘முத்து மாமா’ மற்றும் வி டி வி கணேஷ் அவர்கள் ‘கடப்பார கணேசன்’ என்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க உள்ளனர். இத்திரைப்படம் ஒரு மருத்துவமனையில் நிகழும் திரில்லரான, நகைச்சுவை…

Read More

நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாஸ், கீதா ஆர்ட்ஸ் இணையும் – “தண்டேல்” திரைப்படம், பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !!

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும்  “தண்டேல்” திரைப்படம்  பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !! இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதலர் தினத்திற்கு சற்று முன்னதாக, தண்டேல் திரைப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. காதலர்கள் காதலை இப்படத்துடன் கொண்டாட, சரியான வாய்ப்பை இது  வழங்குகிறது. படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போஸ்டர், முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய்…

Read More

‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார் ரோஸ்மின்!

திறமையான கலைஞர்களை அரவணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை தமிழ் திரையுலகம் தவறாமல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் இருந்து வரும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளனர். இதில் நடிகை ரோஸ்மினும் விரைவில் இணையவுள்ளார். நடிகர் திலீப்பின் ‘பவி கேர் டேக்கர்’ திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பிற்காக மலையாள ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் ரோஸ்மின். அவர் இப்போது இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரோஸ்மின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ரோஸ்மின் தனது முதல் தமிழ் திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்டதாவது, “சில அனுபவங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. என்னுடைய கரியரில் முக்கியமான கட்டத்தில் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்.…

Read More

போலீசாக நடித்த அனுபவம் : நடிகர் நகுல் பேச்சு !

நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்குநர் பாலாஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, “இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசிகுமார் சார் இன்று வெளியிட்டார். எனது முதல் படத்திற்கும் அவர்தான் வெளியிட்டார்,அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளார்.அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். இந்தப் படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நகுலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடித்துள்ள இன்னொரு நடிகர் அலெக்ஸ் . அவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மூன்று…

Read More

‘கட்சி சேரா’ & ‘ஆச கூட’ புகழ் சாய் அபயங்கர் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

இசையின் மீது தீராத ஆர்வமும் காதலும் கொண்டவர்கள் திரைத்துறையிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார்கள். சாய் அபயங்கர் தனது முதல் முயற்சியான ‘கட்சி சேரா’ மற்றும் ‘ஆச கூட’ ஆகிய சுயாதீன டிரெண்டிங் பாடல்கள் மூலம் ஒரே இரவில் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இப்போது, லோகேஷ் கனகராஜ் எழுத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார். ‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுபற்றி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறுகையில், “இதை விட சிறந்த அறிமுகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தத் தருணத்தில் உற்சாகமும் பொறுப்புகளும் எனக்கு அதிகமாகியிருக்கிறது. இந்த சிறப்பான வாய்ப்பை வழங்கிய பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் சார், லோகேஷ்…

Read More

கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் தயாரிப்பில் விர்ச்சுவல் செட் புரொடக்ஷன் தொழில்நுட்பத்தில் பாடல் உருவாக்கம்

இந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. யுவன் 360 நிகழ்ச்சி அதன் சமீபத்திய மைல்கல் ஆகும். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அதன் அடுத்த படைப்பாக நிறுவனத்தின் ஒரு அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் (Ping Records) வாயிலாக ‘ராக்காயி’ என்ற பாடலை வழங்குகிறது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் இதை இணைந்து தயாரித்துள்ளனர். தொலைக்காட்சி பிரபலமான கேபிஒய் பாலா மற்றும் நட்சத்திர தம்பதிகள் சேத்தன், தேவதர்ஷினியின் மகளான ’96’ திரைப்பட புகழ் நியதி முதன்மை வேடங்களில் இதில் தோன்றுகின்றனர். கலகலப்பான காதல் பாடலான ‘ராக்காயி’ ஏ.கே.…

Read More