பேமிலி படம் – திரை விமர்சனம்

திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும் நாயகன் உதய் கார்த்திக், பல தேடல்களுக்கு பிறகு தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்கிறார். இவர் சொன்ன கதை பிடித்து போக, படத்தை தயாரிக்க முன்வருகிறார் அந்த தயாரிப்பாளர். ஆனால் படத்தில் இன்றைய முன்னணி நடிகரான தன் தம்பி தான் நாயகன் என்கிறார். ஆனால் கதைபிடித்த தயாரிப்பாளரின் தம்பியோ புது இயக்குனருக்கு சரி வர இயக்க தெரியுமோ என்னவோ… அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தன் அண்ணனிடம் சொல்லி விட, சிதைந்து போகிறது உதய் கார்த்திக்கின் இயக்குனர் கனவு. மூத்தஅண்ணன் வழக்கறிஞர். அடுத்த அண்ணன் ஐ டி துறையில் என குடும்பத்தில் சம்பாதிப்பவர்களாக இருக்க, கடைசி தம்பி மட்டும் இயக்குனர் கனவில் ஏக்கத்துடன் கனவுகளை சுமந்து திரிய… இந்நிலையில் தான் திடீர் திருப்பம். உதய் கார்த்திக் இயக்கும் படத்தை தயாரிக்க அவரின்…

Read More

புஷ்பா தி ரூல் – திரை விமர்சனம்

புஷ்பா முதல் பாகத்தில் செம்மரம் மட்டும் கூலி தொழிலாளியாக இருந்து படிப்படியாக செம்மர கடத்தல் கும்பல் தலைவனாக மாறுவார் அல்லு அர்ஜுன். இந்த இரண்டாம் பாகத்தில் அவரது தலைமை பொறுப்பை தட்டி பறிக்க திட்டமிடும் தொழில் எதிரிகளிடம் இருந்து எப்படி அதை மீட்டுக் கொள்கிறார் என்பதை கோடிகளை கொட்டி சொல்லி இருக்கிறார்கள். இந்த கதைக் களத்துக்குள் மனைவியின் புகைப்பட ஆசையை நிறைவேற்ற முதலமைச்சரையே மாற்றும் புஷ்பா, தனது குடும்ப அடையாளத் துக்காக அண்ணனிடம் அவமானப்படுவது, அதே அண்ணன் மகளுக்கு ஆபத்து என்றதும் உயிரைப் பணயம் வைத்து மீட்க புறப்படுவது போன்ற கிளை க் கதைகளும் பிரமாதம் சொல்ல வைக்கின்றன. ஒற்றைக் காலில் கயிற்றைக் கட்டி தலைகீழாக தொங்க விடப்பட்டிருக்கும் முதல் காட்சியிலேயே தனது வீர தீர பிரதாபத்தில் புஷ்பா, ரசிகர்களை தனக்கு நெருக்கமாக்கி கொள்கிறார். பெண் வேடமிட்டு…

Read More

பொங்கல் பண்டிகை ரேஸில் முதல் படமாக களமிறங்கிய ‘வணங்கான்’

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். நாயகி ரித்தா மற்றொரு நாயகியாக நடித்தூள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜன-10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ‘வணங்கான்’ திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. பொங்கல் வெளியீட்டு பட்டியலில் எந்தெந்த படங்கள் இடம்பிடிக்க இருக்கின்றன என்கிற அறிவிப்புகள் எதுவும் இதுவரை உறுதியாகாத நிலையில் ‘வணங்கான்’ படத்தின் ரிலீஸ் முதல் அறிவிப்பாக வெளியாகி உள்ளது குறிப்படத்தக்கது. அதற்கு கட்டியம் கூறும் விதமாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தபடத்தில் இருந்து அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையும், ஒரு கையில் விநாயகர்…

Read More

சோசியல் மீடியா விமர்சனம் செய்ய அனுமதியுங்கள்-‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ பட தயாரிப்பாளர் கோரிக்கை!

அன்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்,செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வணக்கம்.. வரும் டிசம்பர் 13 அன்று எனது ஃப்ரைடே ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர் நடிப்பில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ எனும் திரைப்படம் வெளிவரவிருக்கிறது. தற்போது திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக் , எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்ற உங்களின் அறிக்கை என் போன்ற சிறுபட தயாரிப்பாளர்களுக்காக சற்று பரிசீலனை செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது. ஆம் பல சிறு படங்கள் இது போன்ற சோசியல் மீடியா மற்றும் இணையதளங்களினால் மட்டுமே வெளியே தெரிகிறது. எனவே தயாரிப்பாளர்கள் அனுமதியோடு அவர்கள் பரிந்துரைக்கும் யூடியூப் சேனல் மட்டுமாவது விமர்சனங்களை வெளியிட்டால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்து. எத்தனையோ பெரிய நடிகர்கள்…

Read More

சிரஞ்சீவியின் அடுத்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்: SLV சினிமாஸுடன், “தசரா” இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா புதிய படம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்.  அவரது கெரியரில் தொடர்ச்சியாக அறிமுகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்துள்ளார்.  நம்பிக்கைக்குரிய வளரும்  இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன், அவரது தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சிரஞ்சீவியின் அடுத்த படம், அவரது தீவிர ரசிகரான ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற மிகவும் திறமையான இயக்குநருக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. இயக்குநரின் முதல் படமான “தசரா” மாபெரும் வெற்றி பெற்றது, வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பரவலான பாராட்டையும் பெற்றது. பல மதிப்புமிக்க விருதுகளையும் இயக்குநர் வென்றார். சிரஞ்சீவி உடனான அவரது இந்தத் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.  ஸ்ரீகாந்த் ஒடேலா  மிகவும் ஸ்பெஷலான இந்த திரைப்படம் குறித்து, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேச்சுரல் ஸ்டார் நானியின் யுனானிமஸ்…

Read More

“தயாரிப்பாளர் c.v.குமார் தமிழ் சினிமாவின் சொத்து” -சூது கவ்வும் -2 பட விழாவில் நடிகர் மிர்சி சிவா புகழாரம் !!

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்…

Read More

புயல் மற்றும் கனமழை காரணமாக டிசம்பர்-27க்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ராஜா கிளி’ ரிலீஸ்

‘மிக மிக அவசரம்’, ‘மாநாடு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீன், முபாஸிர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக…

Read More

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பீரியட் ஆக்‌ஷன் படமான ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் நுழைகிறது!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான ’ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1:  ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ மூலம் சரித்திரம் படைக்க உள்ளார். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படம் முன்னெப்போதும் இல்லாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவதை உறுதியளிக்கிறது. பீரியட் ஆக்‌ஷன் படத்தில் பவன் கல்யாணின் புதிய அவதாரத்தை காண ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.   ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் 17ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்‌ஷன்- அட்வென்ச்சர் படமாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் புகழ்பெற்ற ஹரி ஹர வீர மல்லுவின் கதைதான் இது. சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்றவற்றை பிரமாண்டமான பட்ஜெட்டில்…

Read More

” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா.

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.   இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும்…

Read More

டிஸ்னியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரத்யேகமான புதிய போஸ்டரில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாக கர்ஜிக்கிறார்!

டிஸ்னியின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பிரம்மாண்ட ஊடக நிகழ்வில் நம்ரதா ஷிரோத்கர் கட்டமனேனி சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரத்யேகமான புதிய போஸ்டரை வெளியிட்டார். டைமனுக்கு அலி மற்றும் டாக்காவுக்கு சத்யதேவ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். டிஸ்னியின் முஃபாசா: தி லயன் கிங் டிசம்பர் 20 ஆம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. இதில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முஃபாசாவாகவும், பிரம்மானந்தம் பும்பாவாகவும், டைமோனாக அலியும், சத்யதேவ் டாக்காவாகவும், அய்யப்பா பி ஷர்மா கீரோஸாகவும் குரல் கொடுத்துள்ளனர்.

Read More