பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பீரியட் ஆக்‌ஷன் படமான ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் நுழைகிறது!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான ’ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1:  ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ மூலம் சரித்திரம் படைக்க உள்ளார். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படம் முன்னெப்போதும் இல்லாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவதை உறுதியளிக்கிறது. பீரியட் ஆக்‌ஷன் படத்தில் பவன் கல்யாணின் புதிய அவதாரத்தை காண ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் 17ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்‌ஷன்- அட்வென்ச்சர் படமாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் புகழ்பெற்ற ஹரி ஹர வீர மல்லுவின் கதைதான் இது. சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்றவற்றை பிரமாண்டமான பட்ஜெட்டில் செட் உருவாக்கியுள்ளனர். சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்ட இவை அனைத்தும் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.

 

புகழ்பெற்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் டிரைக்டர் நிக் பாவெலின் இயக்கத்தின் கீழ் 400-500 ஸ்டண்ட்மேன்கள் மற்றும் கூடுதல் கலைஞர்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகர் பவன் கல்யாண் ரிஸ்க் எடுத்து செய்த ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் பாராட்டு பெறும். படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் விஜயவாடாவில் கடைசி ஷெட்யூல் நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டத்தில் பவன் கல்யாண் மற்றும் 200 கலைஞர்கள் பங்கேற்கும் மற்றொரு பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சி இதில் இடம்பெறும். அதன் பிறகு படப்பிடிப்பு முடிவடையும்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் மார்ச் 28, 2025ல் வெளியாகும்.

*டீசர் & நடிகர்கள் விவரம்:*

’ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீசரின் பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏழைகளின் பணத்தில் பணக்காரர்கள் செழித்து வளரும் நாட்டில் நீதிக்காக போராடும் ஒரு தனி வீரனாக பவன் கல்யாணின் கதாபாத்திரத்தை டீசர் வெளிப்படுத்துகிறது. அதன் பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணியின் இசை ஆகியவை பிரம்மாண்டமாக அனுபவத்தை ரசிகர்களுக்கு உறுதி செய்கிறது.
பவன் கல்யாணுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல் முகலாய பேரரசராகவும், நிதி அகர்வால் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். பவன் கல்யாண் மற்றும் பாபி தியோல் இடையேயான அதிரடி மோதலை டீசர் காட்டுகிறது. மேலும் நடிகர்கள் எம். நாசர், ரகு பாபு, சுனில் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

*தயாரிப்பு & குழு:*

மெகா சூர்யா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் ஏ. தயாகர் ராவ் தயாரிக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வழங்குகிறார். ஞானசேகர் விஎஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை கையாண்டுள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பாளராக தோட்டா தரணி கலைத் துறையை மேற்பார்வை செய்கிறார். விஎஃப்எக்ஸ் குழுவில் ஆஸ்கர் விருது பெற்ற விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஸ் மோகன், சோசோ ஸ்டுடியோஸ், யூனிஃபை மீடியா மற்றும் மெட்டாவிக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

*இயக்குநர் ஜோதி கிருஷ்ணா:*

இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் க்ரிஷ் ஜகர்லமுடி ஆரம்பத்தில் இந்தப் படத்தை இயக்கினார். இப்போது ஜோதி கிருஷ்ணா மேற்பார்வையின் கீழ் மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும்.

    

Related posts

Leave a Comment