”கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” ‘சீசா’ தயாரிப்பாளரின் உருக்கமான பேச்சு

  விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார். வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல்,…

Read More

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், “மாமன்”

Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.   இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று , படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது. கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.

Read More

நடிகர் வெற்றியின் புதிய திரைப்படமான “ஹீலர்” படப்பிடிப்பு துவங்கியது.

D.R பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யவதி அன்பலகன் மற்றும் தனுஷ் ராஜ்குமார் தயாரிப்பில் உருவான “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. இதில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி,அபினயா, வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பேரரசு,தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான திரு.பழக்கருப்பையா, நடிகர் சரண்ராஜ், நடிகர் கூல் சுரேஷ் , இயக்குனர் சுப்ரமணியம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு (15.12.2024) பிரசாத் லேப்பில் இனிதே துவங்கியது. நடிகர்கள் : வெற்றி, ராதிகா ப்ரீத்தி, பேரரசு, பழக்கருப்பையா, சரண்ராஜ், வினோத் சாகர், சுப்ரமணியம் சிவா, அபினயா தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு நிருவனம் : D.R பிக்சர்ஸ் தயாரிப்பாளர் : சத்யவதி அன்பலகன், தனுஷ் ராஜ்குமார் இயக்கம் : தனுஷ் ராஜ்குமார் இசை : ஜுபின் ஒளிப்பதிவாளர் : இளையராஜா  …

Read More

சீமான் அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி – அலங்கு பட விழாவில் பேசிய நடிகர் குணாநிதி!

அலங்கு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேலும், இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், “ அனைருக்கும் மாலை வணக்கம். இயக்குனர் சக்தி வந்து என்னை அழைத்தார் . நான் உடனே வருகிறேன் என்று கூறினேன். இயக்குனர் சக்தி என்னுடைய அஞ்சாதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். ரொம்ப நாளைக்கு முன்பு ஒரு கதை கூறினார். நாய்களை பற்றிய கதை அது. நான் நாய்களோடு அதிகம் பழகி இருக்கிறேன், நாய்களோடு வாழ்ந்திருக்கிறேன். பொதுவாகவே நான் என்னுடைய துணை இயக்குனர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற்றியும் கருணையை பற்றியும் தான். இயக்குனர்…

Read More

சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜையில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தரராஜா

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், மரம் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சேவைகளையும் செய்து வருகிறார்.   இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் திரு. பூச்சி முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டனர்.   சங்கரதாஸ் சுவாமிகளின் குருபூஜை விழாவில் மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர்…

Read More

பூமிகா சாவ்லா – யோகி பாபு – கே எஸ் ரவிக்குமார் இணைந்து நடித்துள்ள ” ஸ்கூல் “

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்திருக்கும் படம் ” ஸ்கூல் “ இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ். எடிட்டிங் : ராகவ் அர்ஸ் கலை : ஶ்ரீதர் ஸ்கிரிப்ட் கன்சல்ட்ண்ட் : V. நிவேதா விளம்பர வடிவமைப்பு : சதீஷ் J மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ் இணை தயாரிப்பு : K. மஞ்சு தயாரிப்பு : Quantum Film Factory R.K.வித்யாதரன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் R.K.…

Read More

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது!!

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ்,…

Read More

பட முன் வெளியீட்டு நிகழ்வில், மாஸ்டர் & கேம் சேஞ்சர் இணைந்து தோன்றவுள்ளனர்

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாஸ்டர் ஃபிலிமேக்கர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் “ரங்கஸ்தலம்” எனும் கிளாசிக் பிளாக்பஸ்டரை வழங்கினார்கள். கிராமப் பின்னணியில் உருவாகியிருந்த, இந்த ஆக்சன் படம், அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தக் கூட்டணி விரைவில் தங்கள் இரண்டாவது படமான RC 17 க்காக இணையவுள்ளனர். இப்போதே இது இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது. “கேம் சேஞ்சர்” அமெரிக்காவில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வைக்…

Read More

சூது கவ்வும் 2  -திரை விமர்சனம்

 2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், பத்து ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகத்துக்கு வந்திருக்கிறார்கள். முதல் பாகத்தின் இறுதியில் அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்கு பதிலாக மகன் கருணாகரன் அரசியலுக்குள் வருவார். அதனால் இந்த இரண்டாம் பாகத்தை அவரிடம் இருந்தே தொடங்கி இருக்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு குருவான மிர்சி சிவா சிறையில் இருந்து வெளிவந்து தன்னுடைய கற்பனை காதலி சாவுக்கு காரணமான கருணாகரனை பழி  வாங்க துடிக்கிறார். அதே நேரம் அவரை பிடிக்க காவல்துறை அதிகாரி யோக் ஜேபி தருணம் பார்த்து காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் தனது கட்சி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆக வேண்டிய நேரத்தில் மயங்கி விழுந்து கோமாவுக்கு போன வாகை சந்திரசேகர் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கண் விழிக்கிறார். அப்போது அரசியல்…

Read More

சென்னை மதுரவாயல் ஏ ஜி எஸ் திரையரங்கில் சிறப்பு காட்சியுடன் ரசிகர்கள் நூறாவது நாள் கொண்டாட்டம்

ரசிகர்கள் பேரார்வத்துடன் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகி உலகெங்கும் பெரும் வெற்றி பெற்று ரூபாய் 460+ கோடி வசூல் செய்து 2024ம் ஆண்டின் நெம்பர் 1 பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரைப்படமாக நூறாவது நாளை நிறைவு செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் மாபெரும் வெற்றிப் படமாக உருவெடுத்துள்ள ‘கோட்’ திரைப்படத்தின் நூறாவது நாளை கொண்டாடும் விதமாக சென்னை மதுரவாயலில் உள்ள ஏ ஜி எஸ் திரையரங்கில் ரசிகர்களின் உற்சாக பங்கேற்புடன் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 2024ம் வருடத்தின் மிக பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றான ‘கோட்’ படத்தை ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்தனர். வெங்கட்…

Read More