நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் “தி கேர்ள்பிரண்ட்”. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள “தி கேர்ள்பிரண்ட்” படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர். இன்று, பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீசரை வெளியிட்டார். படம் குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது.. “”தி கேர்ள்பிரண்ட்” டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல…

Read More

தமிழ் இலக்கியச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் கபிலன்வைரமுத்து பதிவு

ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளி வந்த நாவல் ஆகோள். பொதுமக்களைக் குற்றவாளிகளாக நடத்தும் போக்கு இன்றளவும் உலக அரசியலில் இருக்கிறது என்ற கருத்தை ஒரு டைம் டிரேவல் கதைவழி சொல்லிய புத்தகம். ஆகோள் ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதனிடையே ஆகோள் நாவலின் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் இந்தாண்டு வெளியானது. எதிர்காலத்தில் அறிவியலின் துணை கொண்டு அதிகார மையங்கள் மக்களின் சிந்தனைகளை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தக்கூடும் என்பதை மாக்கியவெல்லி காப்பியம் பேசியிருக்கிறது.   குற்றப்பரம்பரை சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மதுரை எட்டு நாடுகளின் வரலாறு இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகோள் மற்றும் மாக்கியவெல்லி காப்பியம் நூல்கள் பாவை கல்வி நிறுவனங்களின் சிறந்த அறிவியல் புதினம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு கபிலன்வைரமுத்துவுக்கு தமிழ் இலக்கியச் செம்மல் விருது வழங்கப்பட்டது. தற்போது…

Read More

மூத்தோர் தடகள வீரர்களுக்கு வாழ்நாள் சாதனை விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “XXI Chennai District Masters Athletic Championship 2024” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது   இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது திரு மேகநாத ரெட்டி IAS இந்த போட்டியின் முதல் நாளை துவக்கி வைக்க (டிசம்பர் 8, 2024) சிறப்பு விருந்தினர்கள் நடிகர் இயக்குனர் SJ சூர்யா, நடிகர் சூரி, நடிகர் சித்தார்த், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் R.அர்ஜூன் துரை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன், Dr.…

Read More

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா !!

SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில்,  மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள்  கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது. ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்… இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது… மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்தைக் கொண்டு வருகிறோம். இந்தப்படம் ஆரம்பமாக மிக முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு நன்றி. சதீஷ் மாஸ்டர், அருமையாக…

Read More

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபயர்’ இசை வெளியீடு

பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும். ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தாவுமான எஸ் கே ஜீவா வசனங்களை…

Read More

தூவல் – திரை விமர்சனம்

தூவல் என்பது மூங்கில் மூலம் மீன் பிடிக்கும் ஒரு முறையாகும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் உள்ள சிங்காரப்பேட்டை கிராமம் தான் கதைக்களம். அந்த ஊரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் வரும் மீன்களை தூவல் முறை மூலம் பிடிப்பதே இவர்களது தொழில். இந்த தொழில் அந்த ஊரின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாகவும் ஆகிவிடுகிறது. இந்நிலையில் தூவல் முறை மூலம் பிடிக்கும் மீன்களை விட வெடி வைத்து பிடித்தால் அதிக மீன்களை அள்ளலாமே என்று பேராசை கொள்ளும் ஊர் பெரியவர் ஒருவர் மீன்களை வெடி வைத்து பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் இதுவே பிரச்சனையாகிறது. ஏற்கனவே அந்த ஊரின் வனச்சரகர் காட்டு வளங்களை எப்படி எல்லாம் சுரண்ட முடியுமோ அப்படி எல்லாம் சுரண்டுகிறார். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கூட தேடிப் பிடித்து மாமூலை பெற்றுக் கொள்கிறார். இந்நிலையில் இவரது கவனம் ஆற்று…

Read More

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆன்மிக ஆல்பம் !!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர், இசையமைப்பாளர் வித்யாசாகர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் முறையாக ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சுயாதீன ஆல்பங்கள், திரைப்பட பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் இந்த “அஷ்ட ஐயப்ப அவதாரம்” இசை…

Read More

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்  டீஸர்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக…

Read More

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான காமெடி, பொழுது போக்கு திரைப்படமாக ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ZEE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை…

Read More

டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!

கடந்த 2019 இன் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பில் கதாபாத்திரங்களுக்கு பல முன்னணி நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். முஃபாசாவாக அர்ஜுன் தாஸ், டாக்காவாக அசோக் செல்வன், நடிகர்கள் ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டைமனுக்கு குரல் கொடுத்துள்ளனர். மேலும், இளைய ரஃபிக்கின் குரலாக விடிவி கணேஷ் மற்றும் கிரோஸிற்கு நடிகர் நாசரும் குரல் கொடுத்துள்ளனர். இந்த அனுபவம் குறித்து சிங்கம் புலி பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படத்தில் நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது முற்றிலும் தற்செயலானது. 2019 இல் எனக்கு முதலில் வாய்ப்பு கிடைத்த போது, நான் தயங்கினேன். ஆனால் என்…

Read More