“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” – நடிகர் ஆகாஷ் முரளி!

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான ‘நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார். படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷூவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றார். படத்தின் ட்ரெய்லரில் திறமையான நடிகர்கள் மற்றும் பிரமாண்ட தயாரிப்பு போன்றவை மூலம் இதன் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை…

Read More

“படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்” – நடிகை அதிதி ஷங்கர்!

குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதிதி ஷங்கர். இப்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’நேசிப்பாயா’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படம் பற்றி நடிகை அதிதி ஷங்கர் கூறும்போது, “ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது மற்ற நடிகர்களைப் போல எனக்கும் கனவாக இருந்தது. கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் எப்போதும் அவர் அழகாக காட்டுவதோடு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைப்பார். முழு படப்பிடிப்பு அனுபவமும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஆகாஷ் முரளியுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் கேமரூனும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘நேசிப்பாயா’ திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக இருக்கும்”…

Read More