நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!

தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் நானி இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிகளுக்குப் பிறகு, நானி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சமூக வலைத்தள பதிவில்…

Read More

டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”

புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை” அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார். இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரைஅரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் முயர்ச்சிகளுக்கு பெரும் பாராட்டைத்…

Read More

ராஜ பீமா – திரை விமர்சனம்

சிறுவயதில் அம்மாவை இழந்த ராஜா மனதளவில் பாதிக்கப்படுகிறார். மருத்துவரும் தாயின் அன்புக்கு ஈடாக இன்னொரு அன்பு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவான் என்று நம்பிக்கை தர…. இந்த சூழலில் காட்டில் இருந்து ஊருக்குள் வந்த ஒரு குட்டி யானை ஊரையே நடுநடுங்க வைத்த நேரத்தில் அந்த யானையை தனது அன்பான நடவடிக்கைகளால் ராஜா இயல்புக்கு கொண்டு வருகிறான். இப்போது மகன் ராஜா முகத்தில் மீண்டும் மலர்ச்சியை பார்த்த அவனது அப்பா யானைக்கு பீமா என பெயரிட்டு வனத்துறை அனுமதியுடன் வீட்டிலேயே வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா வளர்க்கும் யானை பீமாவை அரசு சார்பில் நடத்தப்படும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்கிறார்கள் வனத்துறை ஊழியர்கள். ராஜா முகாமுக்கு சென்று பார்க்கும் போது பீமா அங்கில்லை. வேறு யானையை காட்டி இதுதான் அவரது யானை என்று…

Read More

வீரப்படை ஆண்ட வீரா வெற்றிக்குப் பிறந்த தீரா மக்களுக்காக வாழ்ந்தாயே மாவீரா!

-“கவிப்பேரரசு” வைரமுத்து மண்ணையும் மானத்தையும் காத்த எங்கள் மாவீரனே! மனிதராக பிறந்தவர் எவராக இருந்தாலும் “படையாண்ட மாவீரா”வில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதி மெல்லிசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் மெட்டமைத்து இசைத்து சகோதரி சைந்தவி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டால் உயிரை உலுக்கி கண்களில் கொப்பளித்த கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோடி நெகிழ்வோடு நெஞ்சினை நனைக்கும். அறம் சுமந்த உனது வாழ்வியலை இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு இச்சமூகம் பேசிப் பேசி உனது புகழ் பாடும். எங்கள் படையாண்ட மாவீரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பேரன்போடு, வ. கௌதமன் எஸ்.கிருஷ்ணமூர்த்தி பி.எஸ்.எஸ்.ராஜா நிர்மல் இ.குரலமுதன் யு.எம்.உமாதேவன் கே.பாஸ்கர் கு.பரமேஸ்வரி மற்றும் விகே புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பு குழுமம்.

Read More

குடும்பஸ்தன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. மணிகண்டன் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மொழி தெரியாமல் கதாநாயகியும் சிறப்பான முகபாவனைகளைக்…

Read More