லைக்கா புரொடக்ஷன்ஸ் – ஆசிர்வாத் சினிமாஸ் கூட்டணியில் தயாரான’ L2 : எம்புரான் ‘ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின்

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ L 2: எம்புரான்’ எனும் திரைப்படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஜான் விக் சாப்டர் 3 ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள். இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘L 2 எம்புரான் ‘ எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹாலிவுட்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட புகழ்…

Read More

ஸ்ரீகாந்த் – புஜிதா பொன்னாடா நடித்த ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” மார்ச் 14ஆம் தேதி வெளியாகிறது

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் MY INDIA மாணிக்கம் தனது முதல் தயாரிப்பாக தயாரிக்கும் படத்திற்கு ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” என்று பெயரிட்டுள்ளனர். உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.   இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா…

Read More

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது

சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது. 18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறது *மும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025* —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. காளிபட்டணத்தின் பெரும் புதிரான சமூகக் கட்டமைப்பை சீர்குலைத்து பாதிப்பை விளைவிக்கக்…

Read More

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, இந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’

முக்கியமான சில இயக்குனர்களுக்கு அப்புக்குட்டி தான் நடித்து வெளிவந்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, ‘ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது’ என அனைவரும் பாராட்டினார்கள்.. விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் ‘ஓடிடி தளத்தில் நல்ல படங்களுக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு உள்ளது என்கிறார் நடிகர் அப்புக்குட்டி’. ஆகவே தான் நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஓடிடி தளத்தில் மிகவும் கொண்டாடப்படும் என்று நம்பிக்கை கொள்கிறார். அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என இவ்விரு படங்களும்…

Read More

நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன் – மர்மர் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்

தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ரோஹித் பேசும் போது, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்-க்கு இந்த மேடையில் வைத்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நாங்கள் மேடையேறுவதற்கு காரணம்…

Read More

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது

 இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. காளிபட்டணத்தின் பெரும் புதிரான சமூகக் கட்டமைப்பை சீர்குலைத்து பாதிப்பை விளைவிக்கக் கூடிய ஒரு ஒரு மரணத்தை மையமாகக் கொண்ட மனதை திடுக்கிடச்செய்து பதைபதைக்க வைக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரின் , இரண்டாவது சீசன், அதன் மர்மத்தை விடுவிக்கும் அதே வேளையில் அதன் அடி ஆழத்தில் மறைந்திருக்கும் சமூகத்தின் கண்ணுக்குப் புலப்படாத பிளவுகளை வெளிக்கொண்டுவருகிறது. . சூழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 திரைப்படத்தின் முழுமையான…

Read More

‘கூரன் ‘படத்தைப் பாராட்டிய பார்த்திபன்!

நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கூரன் ‘ திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள் .நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, ” எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய இயக்குநர் எஸ்.ஏ.சி அவர்கள் .அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும் அவர் திரைக்கதையில் ஒரு மன்னர்.அவர் செய்த மிகச் சிறந்த திரைக்கதை இளைய தளபதி விஜய். 1992ல் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் தனது மகனை அறிமுகப்படுத்தினார்.அவரது மகன் 26 வது வருடத்தில் என்ன தீர்ப்பு எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.அவ்வளவு பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ் .ஏ. சி . அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த ‘கூரன்’ படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது .இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை…

Read More

ஆங்கிலம் – கன்னடத்தில் படமாக்கப்படும் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ – படக்குழு அறிவிப்பு

ஒரு புரட்சிகரமான சினிமா முயற்சியாக ‘டாக்ஸிக் ‘ என்பது ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி இரண்டிலும் கருத்தாக்கம் செய்யப்பட்டு, எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட முதல் பெரிய அளவிலான இந்திய திரைப்படமாகும். இந்திய மொழியான கன்னடத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே உலகளாவிய திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்படும். சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் எழுதி இயக்கிய, ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ – பல்வேறு கலாச்சார ரீதியிலான கதை சொல்லலை மறு வரையறை செய்ய தயாராக உள்ளது. ஆங்கிலம் – கன்னடம் என இரு மொழிகளிலும் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகளாவிய அளவில் அதிர்வுகளை…

Read More

நேச்சுரல் ஸ்டார்’ நானி – சைலேஷ் கோலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் – கூட்டணியில் உருவாகும் ‘HIT : தி தேர்ட் கேஸ் ‘ எனும் படத்தின் டீசர் -‘ சர்க்கார்’ஸ் லத்தி- குறையற்ற கொடூரம்’ வெளியீடு

நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரைம் வித் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ HIT – தி தேர்ட் கேஸ் ‘ பெரும் பரபரப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி வருகிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர் டாக்டர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ள இந்த திரைப்படம் வெற்றிபெற்ற HIT எனும் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாகும். இந்தத் திரைப்படம் இதற்கும் முன் கவர்ச்சிகரமான காட்சிகளாலும், கண்ணை கவரும் போஸ்டர்களாலும் பார்வையாளர்களிடத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான யுனாானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ‘சர்க்காரின் லத்தி’ எனும் பெயரில் டீசர் ஒன்று.. நானியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. கதைக்களம் – ஒரே மாதிரியாக நிகழும் கொலை…

Read More

சட்டி கறி – ECR அக்கரையில் ஈரோடு ஸ்டைலிலான சிறந்த உணவகம் அறிமுகம்!

சட்டி கறி – ECR அக்கரையில் ஈரோடு ஸ்டைலிலான சிறந்த உணவகம் அறிமுகம் ‘சட்டி கறி ‘ உணவகம் – ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகளுக்காகவே சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வின் மற்றும் காயத்ரி ஆகியோர் பேசுகையில், ” உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு ! எங்களுடைய சட்டி கறி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும், வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டை போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்ற சுவையுடன் கூடிய உணவை வழங்குவதும் தான் எங்களுடைய முதன்மையான இலக்கு.…

Read More