மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கும் #PR04 படம் பிரம்மாண்டமாக தொடங்கியது!

பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படமும் தமிழ் தெலுங்கில் பெரும் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனக்கான இடத்தை பிரதீப் ரங்கநாதன் பிடித்திருக்கிறார். இப்பொழுது பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு பல பெரிய படங்களில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று #PR04 திரைப்படம் பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியது. படத்தின் முதல் காட்சி பிரதீப் ரங்கநாதன் இடம் பெறும்படி…

Read More

“சம்பலில் இருந்து குலசேகரபட்டினம் வரை நீண்ட தூரம் பயணித்திருந்தேன்” நடிகை சீமா பிஸ்வாஸ்!

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது. இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பண்டிட் குயின்’ படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா. ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த…

Read More

சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ மதுரை – திருச்சி ப்ரமோஷன்

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் – மதுரை – திருச்சி – கோயம்புத்தூர் – உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரத்தை தொடர்ந்து நேற்று மதுரை மற்றும்…

Read More

டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில், “தமிழ் சினிமாவில் திறமையான கதைகள் பல வெளியாகி இருக்கிறது. இதில் ‘டெஸ்ட்’ திரைப்படமும் ஒன்று. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா கதை குடும்பம், முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசும். இயக்குநர் சஷிகாந்த் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என திறமையான நடிகர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இந்த வருடம் எங்களுடைய முதல் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் ‘டெஸ்ட்’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்” என்றார். நடிகர்…

Read More

ஆளுநர் சந்திப்பு- நடிகர் பார்த்திபன் அறிக்கை

நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன். உ வே சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக “தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்” என்று துவங்கி “தமிழக ஆளுனருக்கு மரியாதை” எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன். “பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல” என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்!அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனியில் நான் பேசுவதை கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை “இது ஒரு வகையான positive politics “…

Read More

ரெட் ஃப்ளவர்  படத்தில் வரும்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ன் சக்திவாய்ந்த காட்சிகள், படம் பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்

தமிழ் அதிரடித் ஆக்‌ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர், கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்கும் மரியாதை செலுத்தும் வகையில், சக்திவாய்ந்த காட்சிகளை இந்தப் படம் கொண்டுள்ளது என்று இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகிறார். ரெட் ஃப்ளவர் என்ற தலைப்பு அவரது மரபுடன் ஆழமாக இணைக் கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் சுதந்திரத்தை வடிவமைத்த இரத்தம், துணிச்சல் மற்றும் மீள்தன்மையைக் குறிக்கிறது. நேதாஜியை கௌரவிக்கும் காட்சிகள் படத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான உச்சக்கட்டமாக இருக்கும், பார்வையாளர்களிடையே தேசபக்தி பெருமையின் அலையைத் தூண்டும் என்று மேலும் அவர் கூறினார். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் பிரமாண்டமாக தயாரித்த, ரெட் ஃப்ளவர் படத்தில்…

Read More

சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.. இந்நிகழ்வினில்… நடிகர் டோவினோ தாமஸ் பேசியதாவது… இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை, இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், பிரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட்…

Read More

சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ கேரளா ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் – மதுரை – திருச்சி – கோயம்புத்தூர் – உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரூவைத் தொடர்ந்து நேற்று திருவனந்தபுரத்தில் பட…

Read More

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திறந்து வைத்த ‘மெட்ராஸ் பிட்னஸ்’ ஜிம்

இன்றைய சூழலில் ஆண்களும், பெண்களும் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி கூடங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் மெட்ராஸ் பிட்னஸ் எனும் பெயரிலான உடற்பயிற்சி கூடம் சென்னையின் மையப் பகுதியான ஆழ்வார்பேட்டையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திறந்து வைத்திருக்கிறார். ‘பிக் பாஸ்’ புகழ் மணிகண்டன் ராஜேஷ் – ஃபிட்னஸ் கோச் ஹரி பிரசாத் மற்றும் கனி ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த ‘மெட்ராஸ் பிட்னஸ்’ எனும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கான நவீன கருவிகளும், புதிய பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவையை வழங்கும் இந்த உடற்பயிற்சி கூட திறப்பு விழா நிகழ்வில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் சுனில், வைபவ் ,…

Read More

சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘பெங்களூரூ ப்ரமோஷன்

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு பெங்களூரூவில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீரதீர சூரன் – பார்ட் 2’ வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் – மதுரை – திருச்சி – கோயம்புத்தூர் – உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத்தை தொடர்ந்து நேற்று பெங்களூரூ மந்த்ரி ஸ்கொயர் ( Mantri Square) மாலில் பட…

Read More