இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 இல் , கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியான “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பைக் குவித்து, சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, இதுவரையிலான ஸ்ட்ரீமிங்க் சாதனைகளைத் தகர்த்துள்ளது. ZEE தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தின் உலக தொலைக்காட்சி முன்னுரிமையுடன் (WTP) நடந்த டெலிகாஸ்ட் 18.1 TVR (SD+HD) என சாதனை புரிந்தது, இது கடந்த 2.5 ஆண்டுகளில் இந்தியாவில் எந்தவொரு நிகழ்ச்சியும் எட்டாத உயரமாகும். மேலும், 11.1 மில்லியன் AMAs (சராசரி நிமிட பார்வையாளர்கள்) என்பதைத் தாண்டி சாதனை படைத்த இத்திரைப்படம், இந்தியா முழுவதும் பார்வையாளர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம், திரையரங்குகளில் ₹300 கோடியைத் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் OTT வெளியீட்டுக்காக…
Read MoreMonth: March 2025
சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘வீர தீர சூரன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், நடிகர் பிருத்வி, இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் கலை இயக்குநர் பாலசந்தர், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத்தொகுப்பாளர் ஜி.…
Read Moreமோகன்லால்- பிரித்திவிராஜின் ஆக்சன் தெறிக்கும் “எம்புரான்” பட டிரெய்லர் !!
முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ஐமேகஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்… எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த டிரெய்லர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. “எம்புரான்” டிரெய்லர், ரசிகர்களுக்கு அதிரடியான ஒரு விஷுவல் விருந்தாக அமைந்துள்ளது, லூசிபர் படத்தின் கதையிலிருந்து துவங்கும் இந்த டிரெய்லர், மொத்த அரசியல் சூழல் மற்றும் அதிரடி த்ரில்லர் கதைக்களத்தை…
Read Moreதயாரிப்பாளர், நடிகர் V. ராஜாவின் புதிய அலுவலகத்தை கலைப்புலி எஸ். தாணு திறந்து வைத்தார்.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் V .ராஜா தயாரித்து , கதாநாயகனாக அறிமுகமான படம் ” அருவா சண்ட ” ஆதிராஜன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது தயாரிப்பாளர் V. ராஜா ” நானும் ஹீரோதான் ” என்ற படத்தை இயக்கி நாயகனாக நடிக்கிறார். இன்று அவரது புதிய அலுவலகத்தின் துவக்க விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் மற்றும் நடன இயக்குனர் ஹரிகுமார், பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார், இயக்குனர் ஆதிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி தயாரிப்பாளர் V.ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Read More“எம்புரான்” டிரெய்லர் நாளை மார்ச் 20 ஆம் தேதி, ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகிறது !!
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் டிரெய்லர் நாளை, மார்ச் 20 ஆம் தேதி, மும்பையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில் வெளியிடப்படவுள்ளது. “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில், ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது. இதன் ஒரு பகுதியாக படத்தின் டிரெய்லர் நாளை ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகவுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய…
Read Moreஅஸ்திரம் – திரை விமர்சனம்
மூன்று இளைஞர்கள் அடுத்தடுத்து பொது இடத்தில் வயிற்றை கிழித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். மூன்று பேருமே ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்கள். ஒருவரை ஒருவர் உயிரோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டதே இல்லை. இந்த தற்கொலை விவகாரம் காவல்துறைக்கு தலைவலியாய் அமைய… இந்த தற்கொலைகளுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களை காவல்துறை கண்டுபிடித்ததா? என்பது திருப்பு முனைகளுடன் கூடிய கிளைமாக்ஸ். இந்த வழக்கில் புலன் விசாரணை செய்யும் பொறுப்பு கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஷாமை தேடி வருகிறது. முதல் கட்ட தகவலாக இவர்கள் மூவருக்கும் பொதுவாக இருப்பது நன்றாக செஸ் விளையாடும் திறமை என்பதை அறிந்து கொள்ளும் ஷாம், தனது உதவியாளர் சுமனுடன் இணைந்து இந்த வழக்கை தீவிரமாய் துப்பு துலக்குகிறார். விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் திடீரென்று இவரை பார்க்க வருகிறார், பள்ளிக்கால நண்பன் விஜய். ஷாமுக்கு மட்டுமே…
Read Moreஜல்லிக்கட்டு தடைக்கெதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தியது சோசியல் மீடியா தான் – SISMIA தலைவர் கவிஞர் விவேகா பேச்சு
தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் திரு.விவேகா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் LNH Creations திரு.கே.லஷ்மி நாராயணன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைவர் கவிஞர் திரு. விவேகா, “இந்த இனிய மாலைப்பொழுதில் இங்கே குழுமியிருக்கும் ஊடக உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். South indian social media influencers association (SISMIA) தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கமானது கடந்த 14-ஆம் தேதி க்ரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்ட தொடக்க விழாவாக நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். மாபெரும் வெற்றி விழாவாக அது அமைந்தது. சோசியல் மீடியா Influencers என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏன் என்றால் ஒரு உளியை எடுத்து தன்னை சிற்பமாக செதுக்குவது போல தன் கைவசம் இருக்கும்…
Read Moreதமிழர் பிரச்சனைகளுக்கு த.வெ.க. தோழர்கள் குரல் கொடுக்க வேண்டும் – நடிகர் சௌந்தர ராஜா
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி 16/03/2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் அமீரகம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்து இருந்தனர். இந்நிகழ்வினை அமீரக தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ரகுவரன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்மாயில், பொருளாளர் சதிஸ், மகளிர் அணிச் செயலாளர் RJ மாயா மற்றும் கழக நிர்வாகிகளான சுதாகர், சரவணன் சேதுபதி, காரல் மார்க்ஸ், விஜய், ரியாஸ், புவி, சரத் மற்றும் நிஜாம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கழகத் தலைவர் அவர்களின் அன்பு தம்பியுமான திரு மு. சொளந்தர ராஜா அவர்கள்…
Read Moreவேம்பு படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா
ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற நம் பாரம்பரிய கலையான சிலம்பகலையில் ஒன்றான மான் கொம்பு சுற்றும் போட்டியானது நடைபெற்றது, இப்போட்டியில் சிறுவர் சிறுமிகள் பலரும் கலந்து கொண்டனர், அவ்விழாவில் கலந்துகொண்ட வேம்பு படத்தின் நாயகன் ஹரிகிருஷ்ணன் நாயகி ஷீலா மற்றும் இயக்குனர் V. ஜஸ்ட்டின் பிரபு, ஒளிப்பதிவாளர் A. குமரன் பங்கேற்றனர், நடிகர்கள் இருவரும் உலக சாதனை படைத்த சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர், வேம்பு படம் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் படம் என்று அவர்கள் முன்னிலையில் பேசினார்கள் மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் வி.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி…
Read More‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு !
இப்போது மறு வெளியீடு செய்கிற படங்களும் வெற்றி பெறும் காலமாகி வருகிறது. எவ்வளவுதான் ஆக்சன் படங்கள் , திகில் படங்கள் வந்தாலும் நகைச்சுவை முலாம் பூசிய கலகலப்பான வணிகப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தமிழ் ரசிகர்கள் தவறுவதில்லை. இப்போது அப்படிப்பட்ட படங்கள் வராதது தான் ஒரு குறையாக உள்ளதே தவிர, அந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. இதற்கு அண்மை உதாரணமாக அப்படிப்பட்ட வகையில் ‘மத கஜ ராஜா’ படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அதுவும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்துத் தாமதமாக வெளியான போதும் இந்த அளவுக்கு வெற்றியை அடைந்திருக்கிறது என்றால் அப்படிப்பட்ட கலகலப்பான படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மை. 2010 இல் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூல் சாதனையும் பெற்ற படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. ஆர்யா, நயன்தாரா, சந்தானம்,…
Read More