தயாரிப்பாளர், நடிகர்  V. ராஜாவின் புதிய அலுவலகத்தை கலைப்புலி எஸ். தாணு திறந்து வைத்தார்.

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் V .ராஜா தயாரித்து , கதாநாயகனாக அறிமுகமான படம் ” அருவா சண்ட ” ஆதிராஜன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது தயாரிப்பாளர் V. ராஜா ” நானும் ஹீரோதான் ” என்ற படத்தை இயக்கி நாயகனாக நடிக்கிறார். இன்று அவரது புதிய அலுவலகத்தின் துவக்க விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் மற்றும் நடன இயக்குனர் ஹரிகுமார், பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார், இயக்குனர் ஆதிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி தயாரிப்பாளர் V.ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Related posts

Leave a Comment