தயாரிப்பாளர், நடிகர்  V. ராஜாவின் புதிய அலுவலகத்தை கலைப்புலி எஸ். தாணு திறந்து வைத்தார்.

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் V .ராஜா தயாரித்து , கதாநாயகனாக அறிமுகமான படம் ” அருவா சண்ட ” ஆதிராஜன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.   தற்போது தயாரிப்பாளர் V. ராஜா ” நானும் ஹீரோதான் ” என்ற படத்தை இயக்கி நாயகனாக நடிக்கிறார். இன்று அவரது புதிய அலுவலகத்தின் துவக்க விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் மற்றும் நடன இயக்குனர் ஹரிகுமார், பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார், இயக்குனர் ஆதிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி தயாரிப்பாளர் V.ராஜா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Read More

“எம்புரான்” டிரெய்லர் நாளை மார்ச் 20 ஆம் தேதி, ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகிறது !!

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் டிரெய்லர் நாளை, மார்ச் 20 ஆம் தேதி, மும்பையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில் வெளியிடப்படவுள்ளது. “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில், ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது. இதன் ஒரு பகுதியாக படத்தின் டிரெய்லர் நாளை ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகவுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய…

Read More