750-வது நாளை கடந்த கார்த்தி உணவகம் – இதுவரை ஒரு இலட்சம் பேருக்கும் மேலாக உணவு வழங்கப்பட்டுள்ளது!”

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 மதிப்புள்ள சுவையான பிரிஞ்சி (வெஜிடபிள் பிரியாணி) ரூ.10க்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 120 முதல் 150 பேர் வரை இங்கு மதிய உணவு சாப்பிட்டு வருகிறார்கள். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் மதியம் 12.30 மணி முதல் 1:30 மணி வரை இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. லாப நோக்கம் இல்லாமல் மக்களின் வயிறு பசியைப் போக்குவதற்காக மட்டுமே இந்த உணவகம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. வேலை தேடும் இளைஞர்கள், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சினிமா உதவி இயக்குனர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் இந்த உணவகத்தில் தினசரி பசியாறி வருகிறார்கள். இந்த உணவகம் தொடங்கி இதுவரை ஒரு லட்சம் பேருக்கு…

Read More

சரத்குமார் வெளியிட்ட ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இன்று சரத்குமார் ‘தி வெர்டிக்ட்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் முதல் பார்வை எனப்படும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘தி வெர்டிக்ட்’. இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது . இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கிருஷ்ணா சங்கர். அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அவர் படம் பற்றிக் கூறும்போது, ” மர்மங்களும் எதிர்பாராத முடிச்சுகளும் யூகிக்க முடியாத திருப்பங்களும் நிறைந்த திரில்லர் படமாக இந்த ‘தி வெர்டிக்ட்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.இது நிச்சயமாக சிலிர்க்கும் உணர்வோடு பார்வையாளர்களை இருக்கை…

Read More

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” 2026 மார்ச் 19 அன்று வெளியாகிறது !!

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”, வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி, உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உகாதி, குடி பட்வா, சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் நாளில் வெளியாகவுள்ளதால், இந்தியாவில் நான்கு நாட்கள் நீடிக்கும் விடுமுறை வார இறுதி மூலம் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு மார்ச் 20/21 ஆம் தேதி இஃப்தார் பண்டிகையும் வருவதால், ரசிகர்கள் கொண்டாட இது ஏதுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் கன்னட சினிமாவுக்குப் புதிய உயரங்களைத் தரவுள்ள அதே சமயத்தில், உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. கன்னட மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் முதல்…

Read More

இன்று டாஸ்மாக் ஒரு போதை EMI இன்னொரு போதை இது இரண்டும் அழியவேண்டும் EMI  பட  விழாவில் இயக்குனர் பேரரசு பேச்சு..

      xசபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ” EMI ” மாதத் தவணை “. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. தற்போதைய உலகில், 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட,  அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை,  எல்லோரும்  இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ்,  மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ, இஎம்ஐ  போட்டு தான் வாங்குகிறார்கள்.  இந்த மாதிரி இஎம்ஐ வாங்கவேண்டுமானால் அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடவேண்டும், அப்போதான் தான் அவர்களுக்கு இஎம்ஐ…

Read More