வி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர் தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருப்பூர் குருவி’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர்கள் கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்ஷா நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக பிரியராஜா நடிக்க, முக்கியமான வேடத்தில் ‘அருவா சண்ட’ பட நாயகன் இசக்கி ராஜா நடித்திருக்கிறார். ஜெ.கதிர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரக்கோணம் யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிக்றார். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். பிரியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.கே.செல்வமணி தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறார். வரும் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘திருப்பூர் குருவி’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
Read MoreDay: May 20, 2025
லியோ ஹம்சவிர்தன் என தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் ஹம்சவிர்தன்
‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார். லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் மே மாதம் 18ம் தேதி திருமண வரவேற்பு விமரிசையாக நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியோடும் வாழ்த்துகளோடும் இந்த காதல் திருமணம் நடந்தேறியது. நடிகர் லியோ ஹம்சவிர்தன் உடனான திருமணத்தை தொடர்ந்து நிமிஷா இனி நிமிஷா லியோ ஹம்சவிர்தன் என்று அழைக்கப்படுவார். இரண்டு புது படங்களில் நடிக்க லியோ ஹம்சவிர்தன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படங்களின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஹம்சவிர்தனின் முதல்…
Read More”காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது” இயக்குநர் APG ஏழுமலை!
மண் சார்ந்த வலுவான கதைகள் அற்புதமான சினிமா அனுபவத்தைத் தரும்போது பார்வையாளர்கள் மற்றும் சினிமா விமர்சர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுகிறது. இந்த விஷயத்தை இயக்குநர் APG ஏழுமலையின் ‘மையல்’ படத்தின் பாடல்கள், டிரைய்லர் மற்றும் விஷூவல் புரோமோக்களில் பார்க்க முடிகிறது. ‘மையல்’ மே 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்து இயக்குநர் APG ஏழுமலை பகிர்ந்து கொள்கிறார். அவர் பகிர்ந்து கொண்டதாவது, “காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது. பார்வையாளர்களும் தங்களுடன் நிச்சயம் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற தாக்கம் ஏற்படுத்தும் வலுவான கதையைக் கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. அவருடைய ஸ்ட்ராங் ரைட்டிங் மற்றும் தெளிவான கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள்தான் எனக்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுக்க உதவியது. நடிகர்கள் சேது, சம்ரிதி தாரா…
Read Moreவிஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் “லாயர்” !!
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும். விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவருக்கு இணையான எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இப்படத்தில் இணையவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Read More