பணிப்பெண்ணை சீண்டிய அலுவலக மேலாளரை தட்டிக் கேட்டபோது உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்துகிறது நிர்வாகம். அம்மாவின் மருந்து செலவுக்கு பணம் அனுப்பினால் கோபத்தில் எரிந்து விழும் மனைவி, வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவனிடம் முறை வாசலுக்கும் சேர்த்து பணம் கேட்கும் உரிமையாளரிடம் ஆத்திரம்.. உடல்நிலை சரியில்லாத பெண் குழந்தை, 1000 ரூபாய் கடன் கேட்டால், அவமானப்படுத்தும் அறை நண்பன்… இப்படி ஒரு நாள் முழுவதும் பல அவமானங்களை கடந்து செல்லும் நாயகன், அத்தனைக்கும் ஒரே தீர்வு மது தான் என்று எண்ணி அன்றைய இரவு மதுவில் குளிக் கிறார். இதற்கிடையே காணாமல் போன குழந்தையை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் காவல்துறையும், நாயகனால் பாதிக்கப்பட, குழந்தையை தேடும் காவல்துறை தங்களை டென்ஷன் ஆக்கிய நாயகனையும் சேர்த்து தேடுகிறது. நாயகன் போலீசில் சிக்கினாரா… கடத்தப்பட்ட குழந்தையை காவல்துறை…
Read MoreMonth: June 2025
மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது!
’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அதிரடி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்ஷன் சினிமா அனுபவத்தை ரசிகர்கள் பெற இன்னும் ஒரு மாதமே உள்ளது. மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோ குடும்பம் vs பூமியை விழுங்கும் கேலக்டஸ் மோதல் ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 1960களின் ரெட்ரோ-ஃப்யூச்சரிஸ்டிக் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், புதிய MCU Lineup-ஐ அறிமுகப்படுத்துகிறது. ரீட் ரிச்சர்ட்ஸ்/ மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் ஆக பெட்ரோ பாஸ்கல், சூ ஸ்டார்ம்/ இன்விசிபிள் வுமனாக வனேசா கிர்பி, ஜானி ஸ்டார்ம்/ ஹ்யூமன் டார்ச்சாக ஜோசப் க்வின் மற்றும் பென் கிரிம்/ தி திங் ஆக எபோன் மோஸ்-பக்ராச் ஆகியோர் நடித்துள்ளார். சரி, இவர்களின் நோக்கம் என்ன? பூமியை விழுங்கத் துடிக்கும் வலுவான சக்தியான கேலக்டஸ்…
Read More2025 ஆம் ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர், மாமன் ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது!!
~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படத்தை, ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. ~ இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மாமன்” திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம், குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது. இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார். மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ZEE5 மற்றும் ZEE தமிழ்…
Read Moreஏழு திரைப்படம் – ஒரு பிரபஞ்சம் – எல்லையற்ற புராணக் கதைகள் – கொண்ட ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படைப்பான ‘ மகாவதார் நரசிம்மா’ 2025 ஜூலை 25ஆம் தேதியன்று வெளியாகிறது
ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு மகாவதார் நரசிம்மாவுடன் தொடங்கி, 2037 ஆம் ஆண்டின் மகாவதார் கல்கி பார்ட் 2 உடன் நிறைவடைகிறது. மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்த படைப்புகள் தயாராகி இருக்கின்றன. இந்த திரைப்படங்களின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் * மகாவதார் நரசிம்மா (2025 ) * மகாவதார் பரசுராம் (2027 ) * மகாவதார் ரகுநந்தன் (2029 ) * மகாவதார் துவாரகாதீஷ் (2031 ) * மகாவதார் கோகுல நந்தா (2033 ) * மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035 ) * மகாவதார் கல்கி பார்ட் 2…
Read Moreசூரஜ் பார்தி: கடந்த 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலைப்படைப்பை (Everday) உருவாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!
சென்னை:வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத அசல் கலைப்படைப்பை கடந்த 3,000+ நாட்களாக சூரஜ் பார்தி உருவாக்கியுள்ளார். தொடர்ச்சியாக இதை செய்ததன் மூலம் ஒழுக்கம், ஆர்வம், பாரம்பரியம் மற்றும் பரிசோதனை ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் சாத்தியமாக்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஆரம்பித்த இந்த விஷயம் ஒரு தசாப்தம் கடந்து இப்போது அவரது கலை, தத்துவம் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது. “இது அவுட்புட் சார்ந்தது மட்டுமல்ல! நம் இருப்பை நிலைநாட்டுவதும், மன ஒருமைப்பாடும் சேர்த்ததுதான்” என்றார். தலைசிறந்த புடவை வடிவமைப்பாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர் சூரஜ். நெசவாளர் சேவை மையத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவர் அவரது தாத்தா என். வீரப்பன். சில நொடிகளிலேயே கடினமான ஓவியங்களையும் எளிதில் வரையக் கூடியவர். ராணி எலிசபெத், இந்திரா காந்தி மற்றும் ஜாக்குலின் கென்னடி…
Read More*’Dude’ படத்தில் நடிகை மமிதா பைஜூவின் பெயர் ‘குறள்’!!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘Dude’. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவரது கதாபாத்திரப் பெயர் ‘குறள்’ என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது. யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகு ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் பான் இந்தியன் படமான ‘Dude’-ல் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி நடிகை…
Read Moreஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி!
புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ’RIZANA-A Caged Bird’ திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படம் பற்றி வரலட்சுமி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படம் ‘ஸ்கார் ஃப்ரம் தி லயன் கிங்’. எந்தளவுக்கு பிடிக்கும் என்றால், அந்தப் படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த கிங்கிற்கு ஜெர்மி ஐயன்ஸ்தான் குரல் கொடுத்திருப்பார்! இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம். ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா ரசிகர்களாலும் அவர் மிகவும்…
Read Moreபுஷ்பா, தண்டேல், குபேரா இசையில் கலக்கும் டிஎஸ்பி!”
இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில், வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் தந்து, அசத்தியுள்ளார். இந்த சாதனை மூலம் தான் உண்மையான இசை சாம்ராட் என்பதை நிரூபித்துள்ளார். புஷ்பா 1 & 2 அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 – இல் டிஎஸ்பியின் இசை படத்தின் உயிராக இருந்தது. “ஊ சொல்லவா”, “ஸ்ரீவள்ளி” முதல் “புஷ்பா புஷ்பா” என அப்படத்தின் பாடல்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. அவரது இசை, புஷ்பாவின் நறுமணத்தை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது. தண்டேல் சந்தூ…
Read Moreவண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்யும் AKB!
AKB டெவலப்பர்ஸ் & ப்ரோமோட்டர்ஸ் பெருமையுடன் வழங்கும் ’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’ (AKB Pavilion IIT Enclave), ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்திற்கு நேர் எதிரே உள்ள தையூரில் 6.20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு பிரீமியம் கேட்டட் சமூகமாகும். AKB இன் 93வது திட்டமாக, இந்த மேம்பாடு அதன் மூலோபாய இருப்பிடம், சிந்தனைமிக்க திட்டமிடல் மற்றும் முதலீட்டு திறனுக்காக தனித்து நிற்கிறது. ரூ.17 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், 19,000+ சதுர அடி பிரத்தியேக பூங்கா, பிளாக்டாப் சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பசுமையான இடங்களைக் கொண்ட பாதுகாப்பான, முழுமையாக உருவாக்கப்பட்ட அமைப்பிற்குள் 600-1200 சதுர அடியில் நன்கு அமைக்கப்பட்ட நிலங்களை வழங்குகிறது. குடியிருப்பாளர்களுக்கு அமைதியான மற்றும் தன்னிறைவான சூழலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்…
Read MoreZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட்டது. திரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், Google இல் ரசிகர்களின் விருப்பத் தேடலில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் திலீப்பின் 150வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீன கால குடும்ப உறவுகளின் விசித்திரங்களையும், டிஜிட்டல் சோஷியல் மீடியா குடும்பங்களில் எவ்வளவு தாக்கத்தை உருவாக்குகிறது என்பதையும், நகைச்சுவை கலந்து, ஒரு அருமையான ஃபேமிலி எண்டர்டெயினராக சொல்லும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் பாராட்டுச்செய்திகளைத் தொடர்ந்து, ரசிகர்கள் இணையத்தில் படத்தைப் பற்றி அதிகம் தேட, Google…
Read More