‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹனுமான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- ‘சூப்பர் யோதா’வாக நடிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில்…

Read More

அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் தொடக்கம்!

இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் சிறீஸ்கந்தராஜா அவர்கள் ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளார். ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன. DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, Foly Sounds, Dubbing Theater போன்ற ஒழுங்கமைப்புகளுடன் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடக்கும் தொழில்நுட்பக்கூடமும் அதற்கான ஸ்டுடியோவும் அமைந்துள்ளன. திரைப்படங்களை எடுப்பதற்கான நவீன தரத்திலான ஏரி அலெக்ஸா SXT கேமரா, அபெச்சர்…

Read More

மகா அவதார் – நரசிம்மர் திரை விமர்சனம்

புராணத்தில் விஷ்ணு பக்தனான பக்த பிரகலாதன் கதை அனைவரும் அறிந்ததே.இது பல்வேறு கலை வடிவங்களில் மக்களிடம் புகழ்பெற்றது. கிராமங்களில் கூட பக்த பிரகலாதன் நாடகம் கோவில் திருவிழாக்களில் இடம் பிடிக்கும். .விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அனிமேஷன் படமே இந்த ‘மகா அவதார் நரசிம்மர்’ அசுரர் குலத்தை சேர்ந்த காசிபர் மற்றும் திதியின் மகன் இரணியன். அவன் இரணியாட்சனின் சகோதரன். இரணியன், பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்தபோது அவனுக்கு பிரம்மா காட்சி தந்தார். அப்போது அவன் பிரம்மாவிடம், எந்த ஆயுதத்தாலோ, பகலில் அல்லது இரவில், நிலத்திலோ அல்லது வானத்திலோ, மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். இரணியனுக்குப் பிரகலாதன் என்ற மகன் இருந்தான். பிரகலாதன், விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தான். இதைக் கண்டு இரணியன் மிகவும் கோபமடைந்தான். இரணியன்,…

Read More

ஹரிஹர வீரமல்லு – திரை விமர்சனம்

 பவன் கல்யாண் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக வந்திருப்பது இந்த வீரமல்லு. இதில் முதல் பாகம் மட்டுமே தற்போது வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்திற்கு, Sword Vs Spirit என உபதலைப்பு வைத்துள்ளனர். வாளின் (Sword) முனையில் மதத்தைப் பரப்பும் ஒளரங்கசீப்பிற்கு எதிராக, கோயில்களையும் இந்து தர்மத்தையும் காக்கும் பொருட்டு மனவலிமை மிக்க (Spirit) ஹரிஹர வீரமல்லு புரட்சி செய்கிறார். இந்த ஹரிஹர வீரமல்லு ஒரு கற்பனையான கதாபாத்திரம். ஒளரங்கசீப்பை எதிர்த்து, அவர் வசமுள்ள கோகினூர் வைரத்தை, மீண்டும் கோல்கொண்டாவிற்கு ஹரிஹர வீரமல்லு கொண்டு வர நினைத்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை, கற்பனைக்கும் எட்டாத விதத்தில் பிரம்மாண்டமாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஃபேன்டஸிக்கான அற்புதமான அடித்தளம் இந்த படத்தின் பலம். ஆனால் படத்தை ஒற்றை ஆளாக ஹரிஹர வீரமல்லுவை சுமக்க வைத்து நம்மை டயர்ட் ஆக்கி விட்டார்கள். வைரங்களைத்…

Read More

கொடிசியா மைதானத்தில் செப்டம்பர் 20 வித்யாசாகர், செப்டம்பர் 21 விஜய் ஆண்டனி ரசிகர்கள் முன்னிலையில் இசை விருந்து படைக்கவுள்ளனர்

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய இசையின் திலகங்கள், இளையராஜா, ARரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், விஜய் அந்தோணி, அரிஜித் சிங், சோனு நிகம் மற்றும் பல ஜாம்பவான்களுடன் நடத்தப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, புதுமையான பிரம்மாண்ட முயற்சி ஒன்றில் சாஸ்தா புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இறங்கியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கலந்து கொள்ளும் இரண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை கோவையில் நாய்ஸ்…

Read More

கிரைம் திரில்லர் படத்தில் தான்யா ரவிச்சந்திரன்!

‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் கிராமத்து நட்பு, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், ‘சத்ரியன்’ படத்தில் ஆக்ஷன், ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படத்தில் கிராமத்து வீரம் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், ‘றெக்கை முளைத்தேன்’ படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார். இது வரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஜானரை சேர்ந்த ‘றெக்கை முளைத்தேன்’ படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்தும் உள்ளார். தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ், மீராகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்…

Read More

பிரதீப் ரங்கநாதன் – K-Town-ல் ‘ஸ்டார்’ ஆக உயர்ந்து வரும் புதிய ‘டியூட்’

திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து பலர் உற்சாகமும் நம்பிக்கையும் பெறுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர் வெறும் ‘டியூட்’ மட்டுமல்ல, சினிமா தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஒரு நம்பகமான பெயராக மாறிவிட்டார். ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ என இரு படங்கள் மூலமாக வசூலிலும் வெற்றியிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் இயக்குநர்-நடிகர் பிரதீப், தனது மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் முக்கியமான உயர்வை எளிதாகப் பெற்றிருக்கிறார் . இது பலருக்கு கனவாகவே இருந்தாலும்! மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தீபாவளிக்கு அவரது அடுத்த படம் ‘டியூட்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவரின் ஸ்பெஷல்…

Read More

மாரீசன் – திரை விமர்சனம்

மாரீசன்’ என்பது ராமாயணத்தில் இடம் பெறும் ஒரு கதாபாத்திரம். மாரீசன், தனது. உறவினர் ராவணனின் உத்திரவின் பேரில் சீதையை கவர்வதற்காக மாயமான் வேடத்தில் வருகிறான். அதன் பின்னணியில் சீதையை ராவணன் கடத்துகிறான். சூழ்ச்சிக்கும் மாயத்திற்கும் தந்திரத்திற்கும் மாரீசன் கதாபாத்திரம் குறியீடாக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் இப்படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்கள். படத்தில் வரும் பல பாத்திரங்களில் மாரீ சன் எங்கே ஒளிந்து இருக்கிறான் என்பது கதைக்களம். சின்னச் சின்ன திருட்டுகளில் கில்லாடியான பகத் பாசில் தண்டனை முடிந்து பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியில் வருகிறார். வந்ததுமே ஒரு செல்போன் ஒரு பைக் என்று மீண்டும் திருட்டு வேலையை ஆரம்பித்து விடுகிறார். அடுத்து எந்த வீட்டில் திருடலாம் என்று நோட்டம் பிடிப்பவர் வடிவேலு வீட்டில் நுழைகிறார். வடிவேலுவோ கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இருக்க, தனக்கு ஞாபக மறதி நோய்…

Read More

‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் உருவானால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்!

மார்வெலின் ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தின் கதாபாத்திரங்கள் புத்திசாலித்தனமான, நல்ல மனமுடைய அதேசமயம் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்பதை பார்க்கலாம். * மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் (ரீட் ரிச்சர்ட்ஸ்)- நேர்மையான தலைவர் இந்த கதாபாத்திரத்திற்கு சூர்யா பொருத்தமானவர். ஏனெனில், புத்திசாலித்தனமான திரை இருப்பு, எதிர்காலத்தை புரிந்து வைத்திருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் பொருந்திப் போவார். * ஜெயம் ரவி- இவரது அமைதியான அதே சமயம் ஹீரோயிக் வைப், ரீட் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். * இன்விசிபிள் வுமன் (சூ ஸ்டோர்ம்)- வசீகரமான வலுவான பெண் நயன்தாரா- வசீகரத்தையும் அதே சமயம் வலிமையையும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா திரையில் கொண்டு வருவார். கீர்த்தி சுரேஷ்- தனது உணர்வுப்பூர்வமான, ஆழமான நடிப்பிற்காக பெயர் பெற்ற கீர்த்தி சுரேஷ், சூ ஸ்டோர்மாக நடிக்க சரியான தேர்வு.…

Read More

ரசிகர்களைக் கவரும் நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் ‘அந்த ஏழு நாட்கள்’!

தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள் வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை பெருமை மிகு பல படங்களை காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளது. இத்தகைய ஆர்வம் மிக்க தயாரிப்பாளர்களில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸூம் ஒருவர். அவர் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், தனித்துவமான, தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். காதல் – த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்த இப்படத்தின் முதல் தனிப்பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

Read More