Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இசையமைப்பாளர் விகாஸ் படிஸா பேசியதாவது.. ‘ எனக்குத் தமிழில் திரையரங்கில் வெளிவரும் முதல் படம், இதற்கு முன் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் செய்திருந்தேன், எனக்கு முதல் வாய்ப்பளித்த அறிவழகன் சாருக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் குமார் சாருக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள். இயக்குனர் கௌதம் சார் படத்தை வேற லெவலில் செய்துள்ளார். நிறைய உழைத்துள்ளார். தர்ஷன்…
Read MoreMonth: July 2025
இன்றைய நவீன உலக கலையின் புது வடிவம் இந்த புதிய அம்பிகாபதி திரைப்படம் – ஈரோஸ் நிறுவனம் விளக்கம் !!
தனுஷ் நடிப்பில் வரும் 2025 ஆகஸ்ட் 1ம் தேதி, புதிய பதிப்பாக மீண்டும் திரைக்கு வரவுள்ளது அம்பிகாபதி திரைப்படம். இத்திரைப்படத்தின் புதிய கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு இயக்குநர் ஆனந்த் எல் ராய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது. இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சில பகுதிகளை மாற்றி வரும் 2025 ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் இயக்குநர் ஆனந்த்…
Read More”பிளாக்மெயில்’ படம் த்ரில், சர்ப்ரைஸ் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் கலந்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் படமாக இருக்கும்”- இயக்குநர் மு. மாறன்!
‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரெய்லர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர். ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற தரமான ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் மணிமாறன் அடுத்து ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்தான அனுபவத்தை இயக்குநர் பகிர்ந்து கொண்டார். “மனிதகுல வரலாற்றில் பிளாக்மெயில் என்பது தவிர்க்க முடியாத, எழுதப்படாத நடைமுறை. சில நேரங்களில் இது நண்பர்களிடையே நகைச்சுவைக்காக செய்யப்படலாம். ஆனால், சில நேரங்களில் ஆழமான ரகசியங்கள் வெளிக்கொண்டு வரும் விதமாகவும் பல நேரங்களில் பிளாக்மெயில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைகிறது. ‘பிளாக்மெயில்’ படம் பல கதாபாத்திரங்களை சுற்றி நடக்கிறது. கதாநாயகன் தான் எதிர்கொள்ளும்…
Read Moreஏஐ மூலம் உருவான வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்திய இயக்குநர் என்.டி. நந்தா !! வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார். சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2017-ல் வெளிவந்த “வல்ல தேசம்” எனும் அதிரடித் திரில்லர் திரைப்படத்தின் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். இந்த படத்தில் அவர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் ஒளிப்பதிவாளர் (DoP) எனப் பல பொறுப்புகளை ஏற்று தனது பன்முகத் திறமையையும் நிரூபித்துள்ளார். தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கி அசத்தியிருக்கிறார். “என் உயிரின் ஓசை நீயே” எனும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை இன்பத்தை வெகு அழகாகச் சொல்கிறது. இப்பாடல் You Live Only Once எனும் பெயரில் சிற்சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி எழுதியுள்ளார். இன்று வெளியாகியிருக்கும் இப்பாடல் இசை ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, நந்தா “120 ஹவர்ஸ்” எனும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவிருக்கிறது. https://youtu.be/kD_BpmhsFuk
வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார். சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2017-ல் வெளிவந்த “வல்ல தேசம்” எனும் அதிரடித் திரில்லர் திரைப்படத்தின் மூலம் பரவலான பாராட்டுகளைப்…
Read Moreதயாரிப்பாளர் RB செளத்ரியை நேரில் சந்தித்த வடிவேலு – ‘மாரீசன்’ மீது மகிழ்ச்சி பகிர்வு!
திரு. RB செளத்ரி அவர்களின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98 வது திரைப்படமாக வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கும் “மாரீசன்” திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த வடிவேலு அவர்கள் திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதையொட்டி அவர் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு RB செளத்ரி அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திரு.வடிவேலு அவர்கள் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.
Read Moreசூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’ பட டீசர் வெளியானது !
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தின் அப்டேட்டுக்காக, ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், இந்த மெகா பட்ஜெட் படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மாபெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 நிமிடம் 38 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், ஒவ்வொரு காட்சியிலும் சூர்யாவின் மாஸ் லுக், அனல் பறக்கும் ஃபிரேம்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வசனங்கள் என சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், அவரின் வழக்கமான ஃபார்முலாவிலிருந்து விலகி, அதிரடியான மாஸ் கோணத்தில், துணிச்சலான புது முயற்சியாக அமைந்துள்ளது. சூர்யா, ஆர்ஜே பாலாஜி இணைந்திருக்கும் இந்த புதுக்கூட்டணி, அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையிலான அட்டகாசமான படைப்பை…
Read Moreநடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது”- நடிகை தேஜூ அஸ்வினி!
தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘படாக் படாக்’ பாடலில் ஜிவி பிரகாஷ்குமார்- தேஜூ அஸ்வினி இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த வைரல் ஜோடி தற்போது பெரிய திரையிலும் இணைந்துள்ளது. இந்த முறை இன்னும் தீவிரமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் கதைக்களமாகவும் அமைந்திருக்கிறது. எனர்ஜிடிக் மற்றும் யூத்ஃபுல் கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை பார்த்திருந்த தேஜூ அஸ்வினி முதல் முறையாக சீரியஸான பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். “வழக்கமான நடிப்பைத் தாண்டி பல…
Read Moreதிறமையாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது!
சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற நவகோடி கூடைப்பந்து போட்டி, இளம் விளையாட்டு திறமையாளர்களின் கொண்டாட்டமாக மாறியது. உள்ளூர் அணிகள் வயது வாரியாகப் போட்டியிட்டதால், இந்த நிகழ்வு அதிக உற்சாகமானதாக மாறி பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்தது. இந்தப் போட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்று முன்னாள் இந்திய நெட்பால் அணித் தலைவரும், நடிகையுமான பிராச்சி தெஹ்லான், முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் ‘மாமாங்கம்’ திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர். பிராச்சி தெஹ்லான் அறக்கட்டளை மூலம் இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்குவித்து வருகிறார். அவரது வருகை இந்த நிகழ்வுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. “உள்ளூர் அணிகள் போட்டியிடுவதைப் பார்ப்பது அற்புதமான அனுபவம். ஒவ்வொரு போட்டியும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. தேசிய அளவிலான வீரர்களைப் பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்த இளம் கூடைப்பந்து வீரர்களின் திறமையைக் கண்டு நான்…
Read More’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் மீடியா மத்தியில் பாசிடிவ்வான ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த ஆதரவினால் படத்திற்கான திரைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. நிர்வாகத் தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன், “இந்தப் படம் புதுவிதமான சந்தோஷமான வெற்றி அனுபவத்தைக் கொடுத்துள்ளது. எங்களுக்கு இது முதல் படம் என்பதால் ரிசல்ட் எப்படி இருக்கும் என பயந்து கொண்டே இருந்தோம். ஆனால், மக்களின் ரிசல்ட் பார்த்ததும் பெருமையாகவும் திருப்தியாகவும் இருந்தது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. கிளைமாக்ஸ் முடிந்தும் ரசிகர்களால்…
Read Moreயாதும் அறியான் – திரை விமர்சனம்
இரண்டு நண்பர்கள் தங்கள் காதலிகளுடன் வனப்பகுதியில் உள்ள காட்டேஜூக்கு வருகிறார்கள். நண்பர்களில் ஒருவரான நாயகன் தினேஷுக்கு தன் காதலி சுத்த கட்டுப்பெட்டியாக இருப்பது பிடிக்கவில்லை. இதை தங்கள் சக நண்பனிடம் புலம்ப, அந்த நண்பன் தான் இந்த டூரை ஏற்பாடு செய்கிறான். நண்பனின் காதலி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ எந்த மனநிலை கொண்டவர். தினேஷின் காதலியோ எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்பதில் உறுதியாக இருப்பவர். ஆனால் தினேஷோ இந்த டூரில் தனிமை இரவில் காதலியை எப்படியாவது அந்த விஷயத்தில் சரிக் கட்டி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். விடுதி அறையில் பிரானாவை தினேஷ் அந்த நோக்கத்துடன் நெருங்கும்போது காதலி அதற்கு சம்மதிக்க மறுக்க… கெஞ்சி கூத்தாடி கடைசியில் காதலியின் சம்மதம் கிடைத்து எல்லாம் முடிகிறது. ஆனால் தினேஷின் சந்தோஷம் நீடிக்க வில்லை. நடந்து முடிந்த நிகழ்வில்…
Read More