ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து நடிகர் ருத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய அண்ணன் விஷ்ணு விஷால் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்றுதான் சினிமா பயணத்தைத் துவங்கினேன். இந்த படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான்.…

Read More

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங்…

Read More

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான “புரொடக்‌ஷன் நம்பர் 1” மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதிப்பைத் தெரிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும்  பணியாற்றிய இயக்குனர் லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது. இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மின்னும் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார். தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்ட அவர், “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை!, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும்…

Read More

பீனிக்ஸ் – திரை விமர்சனம்

சென்னையில் எம். எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக கைதாகிறார் சூர்யா சேதுபதி. கொலை செய்யப்பட்டவர் எம். எல்.ஏ. என்பதால் அந்த ஏரியாவே கொந்தளிப்பாக இருக்கிறது. நீதிமன்ற காவலில் இருக்கும் சூர்யா சேதுபதியை கொல்ல எம் எல் ஏ-வின் மனைவியான வரலக்‌ஷ்மி சரத்குமார், தனது அடியாட்களை சிறைக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் சூர்யாவோ அத்தனை பேரையும் அடித்து துவைத்து அனுப்பி வைக்கிறார். யார் இந்த சூர்யா.? இவர் எதற்காக எம் எல் ஏ-வை கொன்றார்? கேள்விக்கு விடை அதிரடி மேளாவுடன் கூடிய கிளைமாக்ஸ். தனது முதல் படத்திலேயே அதிரடி நடிப்பில் மிரட்டியிருக்கிறார் சூர்யா சேதுபதி. நடிப்பில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் அதை சரி செய்து விடுவார் என்று நம்புவோம் வரலக்‌ஷ்மி சரத்குமார், முத்துக்குமார், ஹரீஷ் உத்தமன், சம்பத், அபி நக்‌ஷத்ரா,…

Read More

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய புது முகம்: லவ் மேரேஜ் மூலம் அசத்திய நடிகை மீனாட்சி தினேஷ்!

மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையை பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் மேரேஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். லவ் மேரேஜ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் படத்தில் மீனாட்சியின் கதாபாத்திரம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் அனைவரது கவனத்தை. பெற்றுள்ளது. 18+ மற்றும் இரட்டா போன்ற வித்யாசமான, தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் மீனாட்சி தினேஷ். அதே போல தமிழில் லவ் மேரேஜ் படத்திலும் தனது அழுத்தமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பின் மூலம் அதே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மீனாட்சி தினேஷின் எதார்த்தமான நடிப்பு மற்றும் ஸ்க்ரீன் பிரசன்சை பாராட்டியுள்ளனர். மேலும் மீனாட்சி…

Read More

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி .ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து கூலி படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். கூலி படத்தின் முதல் சிங்கிள் Chikitu ஏற்கனவே இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. சூப்பர் ஸ்டார்…

Read More

பறந்து போ – திரை விமர்சனம்

இன்றைய குழந்தைகளின் உலகம் பெரும்பாலான பெற்றோரின் கணிப்புக்கு அப்பாற்பட்டது.குழந்தைகளுக்கான நேரம் ஒதுக்கி அவர்களிடம் நட்பு பாராட்டினால் மட்டுமே அவர்களின் அந்த பருவத்து எண்ணங்களை புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை கொஞ்சம் எமோஷனல், அதிக காமெடியுடன் சொல்லியிருப்பதே இந்த பறந்து போ. மிர்ச்சி சிவா-கிரேஸ் ஆண்டனி தம்பதிகள் தங்கள் ஒரே மகன் விஷயத்தில் பெரிய கனவுடன் இருக்கிறார்கள். இதனால்குடும்பத்தின் அதிகபட்ச தேவைக்காக கணவர் சென்னையிலும் மனைவி கோவையிலுமாக வேலை, தொழில் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். மகன் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது, அவன் எது செய்தாலும் பாராட்டுவது என்று இருந்தாலும், அந்த பிஞ்சு நெஞ்சின் விருப்பமோ அவர்கள் எதிர்பாராத கோணத்தில் இருக்கிறது. அதை மகனுடனான பைக் டூரில் அறிந்து கொள்ளும் அப்பா அதன் பிறகு என்ன முடிவு…

Read More

“இளையராஜாவிற்கு பிறகு இசையை அதிகமாக நேசிப்பவர் வித்யாசாகர் தான்” ; தேசிங்கு ராஜா-2 விழாவில் ஆர்.கே.செல்வமணி பேச்சு

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ்,…

Read More