ஆஃப் ரோடிங்கில் கிங் – சென்னையில் சம்பவம் செய்த டாடா ஹரியர் EV கார்

டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் EV. சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்க பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி டாடா டீலர்ஷிப்பில் இதன் வெளியீடு இன்று நடைபெற்றது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் ஆஃப்-ரோடு அகாடமியில் முற்றிலும் புதிய ஹரியர் EV-இன் செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்வில் லக்ஷ்மி டாடா சார்பில் வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்கள் டாடா ஹரியர் EV கரடு முரடான பாதையில் செய்த சம்பவங்களை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். முற்றிலும் புதிய ஹரியர் EV இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 504 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்…

Read More

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு. மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக…

Read More

குழந்தைகளை கவரும் விதமாக யானையை மையப்படுத்தி உருவாகும் ‘அழகர் யானை’

SV புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிப்பில் உருவாகும் படம் ‘அழகர் யானை’. மரகதக்காடு படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் இரண்டாவதாக இயக்கும் படம் இது. விஜய் டிவி புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் நடிக்கின்றனர்.. இவர்கள் தவிர 80 அடி உயர யானை ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. படம் குறித்து இயக்குனர் மங்களேஷ்வரன் கூறும்போது, “இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை என்பது வாழ்க்கையில் பலருக்கும் குறைந்து வருகிறது. ஒருவருக்கு பணமோ மருத்துவ உதவியோ கொடுத்து உதவுவதை விட அவர்களுக்கு மனோரீதியாக நாம் தரும் நம்பிக்கை என்பதே மிக அவசியமாக இருக்கிறது. அப்படி ஒரு நம்பிக்கையை தரும் படமாக இந்த ‘அழகர் யானை’ உருவாகிறது.. எல்லோருக்குமான மழையையும்…

Read More

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ‘அக்யூஸ்ட்’ படக்குழு மரியாதை செலுத்தினர்

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.   தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ திரையரங்குகளில் கடந்த 25 நாட்களாக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி நடை போட்டு வருகிறது. வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது. திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களின் உற்சாக பாராட்டுகளோடு படக்குழுவினர் கேக் வெட்டி ‘அக்யூஸ்ட்’ வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றிருந்த நிலையில்…

Read More

மீண்டும் இணையும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா – ‘வைகைப்புயல்’ வடிவேலு!!

KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,   நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு கூட்டணியாகும். இவர்கள் ஒன்றிணைந்தாலே திரையரங்கில் சிரிப்பு மழை பொழியும். வயிறு குலுங்க…

Read More

இப்ப அண்ணன்னு சொல்ற விஜய், இவ்வளவு நாளா எங்க போயிருந்தார்?

நடிகர் தக்‌ஷன் விஜய், விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கேப்டன் கோவிலில் அவருக்கு மரியாதையை செலுத்தி விட்டு, பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு, அளித்த பேட்டியில் விஜய் மற்றும் சீமான் இருவரும் தங்களது அரசியலுக்காக விஜயகாந்தை இப்பொழுது புதிதாக கொண்டாடுகிறார்கள் என்றார்! நடிகர் விஜய் தக்‌ஷன் விஜய் ‘கபளிஹரம்’ ‘ஐ அம் வெயிட்டிங்’ மற்றும் புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், டிராபிக் ராமசாமி தொடங்கிய மகாத்மா மகாத்மா காந்தி மக்கள் கட்சியை தலைமை தாங்கி நடத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது! @GovindarajPro

Read More

பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்

சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக வீடியோ ஆல்பம் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. ஆல்பம் பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடல்களாகவும் தான் வெளிவரும். ஆனால் ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் இதிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நினைத்தால், அவள் மனதால் விருப்பப்பட்டால் அதை அவளுக்கும், அவளை சார்ந்தவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றி அமைக்க முடியும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்.. ஒட்டுமொத்த பெண்களின் இரண்டு விதமான வாழ்க்கை முறையை இதில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தங்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழகாக மாற்றும் சக்தி பெண்ணுக்கும் பட்டாம்பூச்சிக்கும் உண்டு என்பதை மையப்படுத்தி தான் இந்த…

Read More

“ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”

மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups) படக்குழு, அதற்கு மாறாக புயலை சவாலாக எடுத்துக்கொண்டு, அன்புடன் தழுவிக்கொண்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆக்ஷன் ஷெட்யூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 45 நாள் ஆக்ஷன் படப்பிடிப்பை, John Wick, Fast & Furious, Day Shift போன்ற படங்களில் தனது ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் JJ Perry தற்போது மும்பையின் மத்தியபகுதியில் நடத்தி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் இதற்கு முன்பு பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச ஸ்டண்ட் நிபுணர்களை இணைத்திருந்த Perry, இப்போது முழுக்க முழுக்க இந்திய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மட்டுமே பணியாற்றத் தீர்மானித்துள்ளார். அவர்களின்…

Read More

கே.பாக்யராஜ் உடன் இணைந்து ‘ஆண்டவன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஸ்வரன், கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரிடம் இருந்து, சிறந்த கதாநாயகன் விருதை பெற்றார்!

மதுரையில் பிரமாண்டமான நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக கதாநாயகன் விருது ஆண்டவன் திரைப்பட நடிகர் மகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது திரைப்பட நடிகர் பாலா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி அவர்களும் மற்றும் மதுரை டெம்பிள் சிட்டி நிறுவனர் திரு குமார் கலந்து கொண்டனர்.. மேலும் பல கலைஞர்களுக்கு விருந்து வழங்கி இந்நிகழ்ச்சியை மதுரை ஸ்ரீ செவன் குரூப் மற்றும் வின்சி ஈவெண்ட் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மாதவன் மற்றும் பாண்டியராஜன் சிறப்பாக நடத்தினர்!  o

Read More

தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம் அறிவிப்பு !!

தேஜா சஜ்ஜா பிறந்தநாளில், பீப்பிள் மீடியா பேக்டரியுடன் இணையும் புதிய படம் – பிரம்மாண்ட கான்செப்ட் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது ! இப்படம் 2027 சங்கராந்திக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது !! ‘ஹனுமான்’ படம் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் யோதா திரைப்படமான “மிராய்” படத்தில் நடித்து வருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேஜா சஜ்ஜா – பீப்பிள் மீடியா பேக்டரி கூட்டணியின் இரண்டாவது திரைப்படமாகும். TG விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரிக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தரமான தொழில் நுட்ப அம்சங்களுடன் உருவாக உள்ளது. இன்று வெளியிடப்பட்ட கான்செப்ட் போஸ்டர் அசத்தலான அம்சங்களுடன் கண்கவரும் வகையில் அமைந்துள்ளது. கருப்பு மற்றும்…

Read More