“பேட் கேர்ள்’ என்னுடைய தயாரிப்பில் கடைசிப் படம்” – இயக்குனர் வெற்றிமாறன்

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் “பேட் கேர்ள்”. அஞ்சலி, சரண்யா, ஹ்ரிது ஹரூன், டீஜே அருணாசலம் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பகிர்ந்து கொண்டதாவது, இயக்குனர் வர்ஷா பேசும் போது, “ஏழு மாதத்திற்கு முன்பு டிரைலர் வெளியீட்டு விழாவில் முதன் முதலாக மேடை ஏறினேன். அன்று முதல் இன்று வரை பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இந்த படம் பல நாடுகளில் பட திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 13 நாடுகளில் 13 பட திருவிழாக்களில் பங்கேற்று வந்திருக்கிறேன். பேட் கேர்ள் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக இந்த வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளில் திரையிடப்பட்டபோது அனைவரும் அங்கு கொண்டாடினார்கள்.…

Read More

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான “நிஷாஞ்சி” படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது!!

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான “நிஷாஞ்சி” படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும்  பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது. ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த டிரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே (Aaishvary Thackeray)  இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதை சித்தரிக்கிறது. ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா (Prasoon Mishra), ரஞ்சன் சந்தேல் (Ranjan Chandel)…

Read More

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

Zee studios & Drumsticks Productions தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது !! Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், R சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.…

Read More