மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்…

கதை…

கதை நாயகன் செல்வராகவன்.. இவரது அக்கா கௌசல்யா.. சாலை வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார் செல்வராகவன்.. ஒரு கட்டத்தில் குஷியை திருமணம் செய்து கொண்டு ஹோட்டல் ஒன்றை நிர்வகித்து வருகிறார்..

கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் திடீரென மனைவி குஷி ரவி தற்கொலை செய்து கொள்கிறார்.. மனைவியின் மரணத்தால் மாறும் செல்வராகவன் திடீரென சமூகப் பொறுப்போடு பல சம்பவங்கள் செய்கிறார்..

அடுத்தது நடந்தது என்ன.? மனைவியின் தற்கொலைக்கு காரணம் என்ன.? இவரது மனதில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

சாந்தமான எதார்த்த மனிதராக நடிப்பில் ரசிகர்களின் மனதை அள்ளிக் கொள்கிறார் செல்வராகவன்.. மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளும் கணவராகவும் ஒரு கட்டத்தில் சமூகப் பொறுப்பாளராக இவர் மாறும் காட்சிகள் எதிர்பாராத திருப்பம்…

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் கௌசல்யா.. பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தில் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. கௌசல்யா கணவராக சதீஷ்..

கதைநாயகியாக குஷி ரவி.. அழகிலும் நடிப்பிலும் ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்..

கந்து வட்டி கொடுமைக்காரனாக மைம் கோபி.. வெளுத்து கட்டி இருக்கிறார்.. இவர்களுடன் ஒய் ஜி மகேந்திரன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரவிவர்மா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. செல்போன் தொழில்நுட்பம் வந்தாலும் இன்னும் சாலை இல்லாத கிராமங்களை தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார்..

ஏகே பிரியன் இசையமைத்திருக்கிறார் பின்னணி இசை மூலம் படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார்.. பாடல்களும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன..

டென்னிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கியிருக்கிறார்.. தொழில் புரட்சி செல்போன் புரட்சி என காலங்கள் மாறிவிட்டாலும் இன்னும் பல பகுதிகளில் மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்..

சாலை வசதியற்ற கிராமங்கள், கந்து வட்டிக் கொடுமைகள், மீட்டர் வட்டி என்று தெரிந்தும் வாங்கும் மக்கள் இப்படியான சூழ்நிலையில் போராடும் ஒரு போராளி எப்படி தெய்வமாகிறான் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்..

Related posts

Leave a Comment