டாக்டர் டூமுக்கு எதிராக ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிரம்மாண்ட மோதலுக்கு தயாராகுங்கள்! அமெரிக்க வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது, டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம். மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்பதிவிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தின் புதிய டிரெய்லர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முன்னணி சூப்பர் ஹீரோக்கள் பலரும் ஒரே திரையில் ஒன்றிணைந்து, இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்திக்கத் தயாராகும் காட்சிகள் இறுதி டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. மார்வெல் உலகின் மிக வலிமையான…
Read More