மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ – முகேன் ராவ் நடிப்பில் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது!

K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை ஜிதேஷ் சாய் வழங்குகிறார். “மருத்துவத் துறையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு” உருவாகியுள்ள இப்படம், மருத்துவப் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. மருத்துவத் துறையில் நிகழும் முக்கியமான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். விவேகா…

Read More

யுவா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் மதுர மோசடி’ – விரைவில் திரைக்கு வருகிறது!

சிட்பண்ட் மோசடியை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதுர மோசடி’. யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சங்கரநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தை வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜய் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவதர்ஷினி, காதல் சுகுமார், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வையும், குடும்ப உணர்வுகளையும் இணைத்து உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள்: – தயாரிப்பு: எஸ். சங்கரநாராயணன் – ( Yuva Films ) – இயக்கம்: வி.கே. விஜயகண்ணா – ஒளிப்பதிவு: எஸ். கார்த்திக் – இசை: பானு ஜேக்கப் – படத்தொகுப்பு: அல் ரமேஷ்

Read More