அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது… His Untamed Presence, Is Your…
Read MoreMonth: October 2025
ஒற்றுமையை வலியுறுத்தும் ‘RAGE OF KAANTHA’ தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது!
வெளிவர இருக்கும் ‘காந்தா’ திரைப்படத்தின் டைட்டில் டிராக்கான ‘RAGE OF KAANTHA’ புதிய எனர்ஜியையும் அதிர்வையும் இசை உலகில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் பாடல் என்று கடந்து செல்ல முடியாத அளவுக்கு தீவிரமான, கதாபாத்திரத்தால் இயக்கப்படும் இசையமைப்பு, கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் உணர்ச்சிகளைக் கடந்து ஒற்றுமையை எதிரொலிக்கும் வகையில் தமிழ்- தெலுங்கில் ராப்-ஸ்டைல் டிராக்காக வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் பாடலின் டீசர் வெளியான 32 நிமிடங்களிலேயே டிவிட்டரில் டிரெண்ட் ஆனது. இன்று வெளியாகும் ‘RAGE OF KAANTHA’ பாடல் வரிகள் கிளர்ச்சி, மன உறுதி மற்றும் லட்சியத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் பாடலில் ராப் இசையுடன் கூடிய வசனங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் இடம்பெறும். ஜானு சந்தாரின் இசை இருமொழிகளுக்கானது மட்டுமல்ல, இருமொழி ரசிகர்களின் மனங்களையும் உள்ளடக்கியது.…
Read More“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!
டான் டிராக்டன்பெர்க்கின் ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் இங்கிலாந்தில் முதன் முதலாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பார்வையாளர்களும் விமர்சகர்களும் படம் குறித்து தங்கள் உற்சாகத்தையும் நேர்மறை விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். புகழ்பெற்ற இந்த ஃபிரான்சைஸின் சமீபத்திய வரவான இந்தப் படத்தில் எமோஷன், நகைச்சுவை மற்றும் அதிரடி ஆக்ஷன் நிறைந்துள்ளது என்ற பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரே’ (Prey) திரைப்படத்தின் மூலம் இந்தத் தொடருக்கு புத்துயிர் அளித்த டான் டிராக்டன்பெர்க், பிரிடேட்டர் பிரபஞ்சத்தின் புதிய சினிமா பார்வையை வழங்கியதற்காக மீண்டும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். விமர்சகர்கள் இந்த படத்தை, “பிரிடேட்டர் நம்பிக்கைகளை சிறந்த முறையில், விரிவாக எடுத்துரைக்கும் பொழுதுபோக்கு அறிவியல் புனைகதை சாகசம்” என்று பாராட்டுகின்றனர். புகழ்பெற்ற வேற்றுகிரக வேட்டைக்காரர்களான Yautja- வின் கதையை விறுவிறுப்பாக சொல்லியதன் மூலம் பேட்லேண்ட்ஸ் பார்வையாளர்களை சீட்டின்…
Read More“சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார்” ; வள்ளுவன் பட ஹீரோவுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் புகழாராம்
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக…
Read Moreபைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்
பைசன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜனரஞ்சகமாகவும், கருத்தாளமிக்க படமாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்ற படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் படத்தை பார்த்து பாராட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். திரைத்துறையை சார்ந்த இயக்குனர்கள் , கலைஞர்கள் என பலரும் பைசன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் பைசன் படத்தை பார்த்துவிட்டு “மாரி படத்தை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீதான் அந்த பைசன், உன் படைப்பை கண்டு பெருமை கொள்கிறேன், இதை தொடர்ந்துசெய், உன் குரல் முக்கியமானது” என்று இயக்குனர் மணிரத்னம் மாரிசெல்வராஜை பாராட்டியுள்ளார்.
Read Moreடாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & கான்சப்ட் வீடியோ வெளியானது !!
அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களுக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும், யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக, பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது உறுதி தவறாத நேர்மைமிகு வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார். இந்த மகத்தான நபரின் வாழ்க்கையை, பெரிய திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது ‘கும்மடி நரசைய்யா’ எனும் வாழ்க்கை வரலாறு திரைப்படம். இந்தப் படத்தில் தலைசிறந்த கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திய பரமேஷ்வர் ஹிவ்ராலே, இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம், தயாரிப்பாளர்…
Read MoreMRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கல்யாண பரிசாக, கார் வழங்கியுள்ளார்
தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான். இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில், எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் கல்யாணத்திற்கு பரிசாக, ஒரு விலையுயர்ந்த கார்…
Read MoreAR ரஹ்மான் இசையில் ‘தேரே இஷ்க் மே’ படத்திலிருந்து ஓ காதலே பாடல் வெளியாகியுள்ளது!
AR ரஹ்மான், ஆதித்யா RK மற்றும் மஷூக் ரஹ்மான் இணைந்து, ஆனந்த் L ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் தமிழ் பாடல் ‘ஓ காதலே’யை வெளியிட்டுள்ளனர். ‘ஓ காதலே’ எனும் இந்த பாடல், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தேரே இஷ்க் மே’ உலகத்திற்குள் முதல் பார்வையாக அமைந்துள்ளது. டீசர் வெளியான தருணத்திலேயே உருவான உற்சாகம், இப்போது முழுமையான இசை அனுபவமாக மாறியுள்ளது. ரஹ்மானின் இசை மாயையில் உருவாகியுள்ள இந்த பாடல், உணர்ச்சிபூர்வமான மற்றும் பிரம்மாண்டமான இசை வடிவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இடம்பெற்றுள்ள இந்த பாடல் காணொளியில், AR ரஹ்மானின் பிரம்மிக்க வைக்கும் இசை, ஆதித்யா RK-வின் தனித்துவமான குரல், மஷூக் ரஹ்மானின் பாடல் வரிகள் ஆகியவை ஓர் அபூர்வ இணைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மனதை உருக்கும் காட்சி வடிவங்கள்…
Read Moreநிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதையான ’ஜூடோபியா 2’ படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகிறது!
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸின் ’ஜூடோபியா 2’ நவம்பர் 28 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. புதிய காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் 2016 ஆம் ஆண்டு அகாடமி விருது வென்ற ’ஜூடோபியா’வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வல் சாகச கதையான ‘ஜூடோபியா 2’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளதை இன்னும் ஒரு மாதத்தில் பெரிய திரையில் பார்க்கலாம். இருவரும் கேரி டி’ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள். இந்தப் படத்தில், கேரி டி’ஸ்னேக் ஜூடோபியாவிற்கு வந்து விலங்கு உலகத்தை தலைகீழாக மாற்றுகிறார். அப்போது ஜூடி மற்றும் நிக் ஒரு பெரிய மர்மத்தின் திருப்பத்தில் தங்களைக் காண்கிறார்கள். இதை முறியடிக்க, அவர்கள் நகரத்தின் எதிர்பாராத புதிய…
Read MoreProduction No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர்
‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழு தயாரிப்பு : சிவநேசன் S (Incredible Productions) இயக்குநர்: சிவநேசன் S (காளிதாஸ் 1 தயாரிப்பாளர்) இசை: விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு: சுரேஷ்…
Read More