நடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்னேஷ்!

தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பு 1991- 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் பெரிய சாம்ராஜ்யத்தையும் வணிகத்தில் கட்டமைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘இட்லி கடை’ புரோமோஷன் நிகழ்ச்சியின்போது இசைஞானி இளையராஜாவின் ‘சின்னத்தாயி’ படத்தில் இருந்து ‘நான் ஏரிக்கரை…’ பாடலை நினைவு கூர்ந்திருந்தார் நடிகர் தனுஷ். காலத்தால் என்றும் அழியாத மெலோடி பாடலாக நிலைத்திருக்கும் அது இப்போதும் இசை ரசிகர்கள் மத்தியிலும் பல மியூசிக் ரியாலிட்டி ஷோக்களிலும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. இந்தப் பாடலையும் படத்தையும் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக நடிகர் தனுஷிற்கு சமீபத்தில் ‘ரெட் ஃபிளவர்’ மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் நடிகர் விக்னேஷ் நன்றி தெரிவித்துள்ளார். “இதுபோன்ற காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெலோடி பாடலை கொடுத்த இளையராஜா அவர்களுக்கு நன்றி. அவரது…

Read More

கம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா உரைகள்:

👤 தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது: இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையும் இப்படத்தில் மாறுபட்ட வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த படம் எனது நண்பர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் அனைவருமே அவர்களது துறைகளில் சிறந்தவர்கள். இந்த படம் மங்காத்தா பிக்சர்ஸ் தளத்தில் மிகவும் வலிமையாக உருவாகியுள்ளது. அனைவரும் மிகச் சிறப்பாக வேலை…

Read More

இசை நிறுவனத்தைத் துவங்கிய ஐசரி கணேஷ்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐசரி  K கணேஷ், இன்று அதிகாரப்பூர்வமாக “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, 360° முழுமையான பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும். தமிழ்நாட்டின் முன்னணி பப்ளிக் லிமிடெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தன்னுடைய அனைத்து படைப்பு மற்றும் வணிக நிறுவனங்களையும் ஒரே பிராண்டின் கீழ் ஒருங்கிணைத்து, முழுமையான IP உரிமையை பெற்று, முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மதிப்பை உறுதி செய்துள்ளது. “இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி,” என்று டாக்டர் ஐசரி K.…

Read More