ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர். ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் காட்சியை இயக்கினார். கிராம பின்னணியிலான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் வழக்கமான படப்பிடிப்பு அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த பிரமாண்டமான…
Read MoreDay: October 12, 2025
வில் – திரை விமர்சனம்
தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை தனது வாரிசு களான இரண்டு மகன்களுக்கு சரிசமமாக பிரித்து உயில் எழுதி வைக்கிறார். அதே சமயம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை மட்டும் ஒரு பெண்ணின் பெயருக்கு உயில் எழுதியிருக்கிறார். அவரது இறப்புக்கு பின் வழக்கறிஞர் மூலம் இந்த தகவல் குடும்பத்துக்கு தெரிய வர… யார் என்றே தெரியாத பெண்ணுக்கு தந்தை எழுதி வைத்த அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் மொத்த குடும்பமும் வேலை செய்கிறது. வேறு ஒரு பெண்ணை பேசி வைத்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். அந்தப் பெண் போலி என கண்டுபிடிக்கும் நீதிபதி, பெரியவர் யாருக்கு தன் வீட்டை எழுதி வைத்தாரோ அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கோர்ட் டில் நிறுத்த போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிடுகிறார். போலீஸ் அதிகாரி அந்த பெண்ணை கண்டுபிடித்து கோர்ட்டில் நிறுத்தினாரா? எழுதி வைக்கும்…
Read More