அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகாவின் ’ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் முதல் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட பரபரப்பான விசாரணைக் கதையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது.
குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் பான் இந்தியன் இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்ஷன் த்ரில்லரான ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆபத்தான ஒரு பணியின் பின்னணியில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களின் அறிமுகம் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. என்ஐஏ அதிகாரியாக ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். விசாரணையும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும் பதற்றமான உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த டீசர் அழைத்துச் செல்கிறது.
‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் மையக்கருவை சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. படத்தின் பிரம்மாண்டமான உலகம், பதற்றமான சூழல் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் ஆகியவற்றின் சில காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. கதையின் முக்கிய விஷயங்களை முழுமையாக வெளிப்படுத்தாமல், சம்பவம் என்ன, விசாரணை எதை நோக்கிச் செல்கிறது, அதன் பின்னணியில் இருப்பது யார் போன்ற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பும் வகையில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ’ஆபரேஷன் டிரால்‘ திரைப்படம் ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை பின்னணியாகக் கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பு ஒரு என்ஐஏ அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகரும்போது ஆபத்து, சதி மற்றும் விடை தெரியாத பல கேள்விகள் நிறைந்த சிக்கலான உலகத்திற்குள் படம் பயணிக்கிறது. உண்மையைத் தேடும் பயணம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில் விசாரணைத் த்ரில்லராக இப்படத்தை டீசர் அறிமுகப்படுத்துகிறது.
இந்தக் கதையின் கதாநாயகனாக, என்ஐஏ அதிகாரியாக ஜெயசூர்யா நடித்துள்ளார். காஷ்மீர் கான்வாய் தாக்குதலின் பின்னணியை ஆராயும் விசாரணையில், அதன் உண்மைகளைத் தேடி அவர் பயணிக்கிறார். விசாரணை, உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த கதையில் ஜெயசூர்யா தீவிரமான மற்றும் ஆக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
’ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. பான் இந்திய த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
பிரபல இசையமைப்பாளர் ரத்தீஷ் வேகா இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கத்துடன், இசை மற்றும் பின்னணி இசையையும் அவரே கவனித்துள்ளார். ஜெயசூர்யாவுடன் முரளி சர்மா, வினய் ராய், சித்திக், சாய் குமார், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, அன்சன் பால் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர்களான விக்ரம் கோச்சர், யஷ் பால் கேரா, மிர் சர்வார், சந்தன் பிஷ்ட், ஹன்சிகா ஜாங்கிட், வாணி டோக்ரா, ஜெய் தாக்கூர், விஜய் திரிவேதி மற்றும் மன்ஹர் சிங் ட்ரிவியா ஆகியோரும் நடித்துள்ளனர்.
விசாரணை, அதிரடி மற்றும் பரபரப்பு நிறைந்த ஒரு விறுவிறுப்பான சினிமா அனுபவத்தை இப்படம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*தொழில்நுட்பக்குழு விவரம்:*
தயாரிப்பு நிறுவனம்: குட்வில் எண்டரடெயின்மெண்ட்ஸ்,
தயாரிப்பாளர்: ஜோபி ஜார்ஜ்,
இணை தயாரிப்பாளர்: சுனிமோல் ஜோபி,
ஒளிப்பதிவு: நஜோஸ்,
படத்தொகுப்பு: ஷஃபீக் வி.பி.,
புராஜெக்ட் டிசைன்: நோபிள் ஜேக்கப்,
புரொடக்ஷன் டிசைன்: சஜீஷ் தாமரசேரி,
கலை இயக்கம்: சுனீஷ் சோதரன்,
ஆடை வடிவமைப்பு: சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா,
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்.
