“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

டான் டிராக்டன்பெர்க்கின் ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் இங்கிலாந்தில் முதன் முதலாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பார்வையாளர்களும் விமர்சகர்களும் படம் குறித்து தங்கள் உற்சாகத்தையும் நேர்மறை விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். புகழ்பெற்ற இந்த ஃபிரான்சைஸின் சமீபத்திய வரவான இந்தப் படத்தில் எமோஷன், நகைச்சுவை மற்றும் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்துள்ளது என்ற பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரே’ (Prey) திரைப்படத்தின் மூலம் இந்தத் தொடருக்கு புத்துயிர் அளித்த டான் டிராக்டன்பெர்க், பிரிடேட்டர் பிரபஞ்சத்தின் புதிய சினிமா பார்வையை வழங்கியதற்காக மீண்டும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். விமர்சகர்கள் இந்த படத்தை, “பிரிடேட்டர் நம்பிக்கைகளை சிறந்த முறையில், விரிவாக எடுத்துரைக்கும் பொழுதுபோக்கு அறிவியல் புனைகதை சாகசம்” என்று பாராட்டுகின்றனர். புகழ்பெற்ற வேற்றுகிரக வேட்டைக்காரர்களான Yautja- வின் கதையை விறுவிறுப்பாக சொல்லியதன் மூலம் பேட்லேண்ட்ஸ் பார்வையாளர்களை சீட்டின்…

Read More

“சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார்” ; வள்ளுவன் பட ஹீரோவுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் புகழாராம்

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக…

Read More

பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்

பைசன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜனரஞ்சகமாகவும், கருத்தாளமிக்க படமாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்ற படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் படத்தை பார்த்து பாராட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். திரைத்துறையை சார்ந்த இயக்குனர்கள் , கலைஞர்கள் என பலரும் பைசன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் பைசன் படத்தை பார்த்துவிட்டு “மாரி படத்தை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீதான் அந்த பைசன், உன் படைப்பை கண்டு பெருமை கொள்கிறேன், இதை தொடர்ந்துசெய், உன் குரல் முக்கியமானது” என்று இயக்குனர் மணிரத்னம் மாரிசெல்வராஜை பாராட்டியுள்ளார்.

Read More

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  & கான்சப்ட்  வீடியோ வெளியானது !!

அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களுக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும்,  யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக,  பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது உறுதி தவறாத நேர்மைமிகு  வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார். இந்த மகத்தான நபரின் வாழ்க்கையை, பெரிய திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது ‘கும்மடி நரசைய்யா’ எனும் வாழ்க்கை வரலாறு திரைப்படம். இந்தப் படத்தில் தலைசிறந்த கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திய பரமேஷ்வர் ஹிவ்ராலே, இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம், தயாரிப்பாளர்…

Read More