ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன்…
Read MoreDay: October 31, 2025
ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!
நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் VTV கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘கிஸ்’ திரைப்படம் அர்ஜுன் (கவின்) எனும் திறமையான இசைக்கலைஞரின் கதையைச் சொல்கிறது. அவரிடம் ஒரு வினோதமான சக்தி உள்ளது — ஒரு ஜோடி முத்தமிடும் போதெல்லாம், அவர்கள் உறவின் எதிர்காலத்தை முன்கூட்டியே காண முடியும்! காதலும் விதியும் மீது நம்பிக்கையற்ற அர்ஜுனின் வாழ்க்கை, மீரா (ப்ரீத்தி அஸ்ரானி) என்பவளைச் சந்தித்த பிறகு பெரும் மாற்றத்தை எதிர்கொள்கிறது. அவள்…
Read More‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து மொழிகளில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிறது!
மலையாள சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் வெற்றி பெற்ற ‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பதை ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்ப்டம் மலையாள சினிமாவின் பிரம்மாண்ட கதை சொல்லல் முறையை மறுவரையறை செய்தது. மேலும், மலையாள சினிமா ஒன்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிக வசூல் செய்தது என்ற வரலாற்று சாதனையையும் இந்தத் திரைப்படம் படைத்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மற்றும் உலகளவில் கவனம் ஈர்த்தது மட்டுமல்லாது 2025 ஆம் ஆண்டில் அதிகம் கொண்டாடப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. டொமினிக் அருண் இயக்கி எழுதிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக மாறுபட்ட நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருடன் நஸ்லென், அஞ்சு குரியன்,…
Read Moreஅனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !
அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது… His Untamed Presence, Is Your…
Read Moreஆரியன் — திரை விமர்சனம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவ்வளவு எளிதில் செய்தியாளர்களிடம் சிக்காத பிரபல நடிகரின் நேர்காணல் நடக்கிறது. அப்போது பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து அந்த நடிகரை சகட்டுமேனிக்கு திட்டியவாறு துப்பாக்கியால் அவரது காலில் சுடுகிறார். அதே வேகத்தில் பார்வையாளர்களாக வந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக்கி அதிர்ச்சியளிக்கிறார் காவல்துறை அவரது டிமாண்ட் என்ன என்று கேட்க, அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதோடு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரையும் விடுகிறார். பொதுமக்கள் கண் முன்னே இறந்தவர் எப்படி இந்த கொலைகளை செய்வார்? அந்த ஐவர் யார்? ஐவரும் கொல்லப்பட்டனரா என்ற கேள்விக்கு விடையே ஆரியன். தொடர் கொலைகளை தடுத்து நிறுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாக விஷ்ணு…
Read Moreமெஸஞ்ஜர் –திரை விமர்சனம்
காதலித்த பெண் மனிஷா ஜஸ்னானி ஏமாற்றியதால் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முடிவுக்கு வருகிறார். அதற்காக தூக்கில் தொங்க முயலும் நேரத்தில் அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசேஜ் வருகிறது.தற்கொலை முடிவை தள்ளி வைத்து விட்டு மெசேஜை பார்க்கிறார். அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருக்கிறார்கள்” என்ற செய்தி இருக்கிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார் என்பது தான். இறந்தவர் எப்படி மெசெஜ் அனுப்ப முடியும்? அவர் உண்மையில் இறந்து விட்டாரா ? என்பதை விசாரிக்கும் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு அவர் இறந்தது உண்மை தான் என்பது தெரிய வருவதோடு, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது ?…
Read More