’யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீராம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தீனா, ராதிகா, சிவாஜி ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கார்த்திக் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார். சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், இயக்குநர் வி.இசட்.துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.…

Read More

IFFI 2025 – கோவாவில் “லால் சலாம்” படத்திற்கு சிறப்புத் திரையிடல் மரியாதை

உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் *56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI)* வில், லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் சிறப்புத் திரையிடலுக்காக தேர்வு செய்யப்பட்டு பெருமையுடன் திரையிடப்பட்டது. இந்த சிறப்புத் திரையிடல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வில்,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,லைகா புரொடக்ஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு GKM தமிழ்க்குமரன்,இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,உட்பட பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். லைகா புரொடக்ஷன்ஸின் படைப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச மேடைகளில் கவனம் பெறுவது பெருமைக்குரிய சாதனையாகும். மேலும், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள லைகா புரொடக்ஷன்ஸின் ‘லாக்டவுன்’ திரைப்படமும் இரண்டு நாட்களுக்கு முன்பு IFFI மேடையில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

ஃப்ரைடே — திரை விமர்சனம்

வழக்கமான கூலிப்படை கதை. அதை வழக்கத்துக்கு மாறாக திரில்லருடன் சுவாரஸ்யம் இணைத்து தந்திருக்கிறார்கள். மைம் கோபி கூலிப்படை வைத்துக்கொண்டு தாராளமாக அதிரடி தடாலடி என வலம் வருபவர். தனக்குப் பணியாதவர்கள் எதிரிகள் என யாராயிருந்தாலும் தனது ஆட்களை அனுப்பி காலி பண்ணி விடுவார். அதே நேரம் அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருக்கிறார். வரும் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கிறது. இதனால் கட்சி எம் எல் ஏ வேட்பாளராக தேர்ந்தெடுத்த ஒருவரை இவரே ஆள் வைத்து போட்டுத் தள்ளுகிறார். அவரது நம்பிக்கைக்குரிய அடியாள் தான் கதையின் நாயகன். நேர்மையான போலீசாக இருந்த தன் தந்தையை கொன்றவனை சிறுவயதிலேயே போட்டு தள்ளியவன், அதற்குப் பிறகு எடுத்த கத்தியை கீழே போட முடியாமல் மைம் கோபியிடம் அடியாளாக சேர்கிறார். தனது…

Read More

டிஸ்னியின் சிறந்த அனிமேஷன் படமாக 93% ராட்டன் டொமேட்டோஸ் மதிப்பெண்களுடன் ‘ஜூடோபியா 2’ திரைப்படம் உள்ளது!

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் பில்லியன் டாலர் ஃபிரான்சிஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வலான ‘ஜூடோபியா 2’ திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ராட்டன் டொமேட்டோஸில் 93% விமர்சகர்களின் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது மட்டுமல்லாது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் டிஸ்னி அனிமேஷன் வெளியீட்டில் சிறந்த படமாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் பல மொழிகளில் வெளியாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் புத்திசாலித்தனமான, வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதை களத்திற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்று வருகிறது. படம் குழந்தைகளுக்காக மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் பெரியவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் நிரூபித்துள்ளது. நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் இணையவெளியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய அனிமேஷன் வெற்றிப் படங்களில் ஒன்றாக ‘ஜூடோபியா’ இருக்கும். வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நவம்பர் 28 ஆம் தேதி…

Read More

வேல்ஸ் – டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் கைகோர்த்த டி ஸ்டுடியோஸ் போஸ்ட் “

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது. இதன் மூலம், இனி ‘வேல்ஸ் – டி ஸ்டுடியோ’ என்ற பெயரில் செயல்படுமென்பது குறிபிடத்தக்கது, இந்நிறுவனங்கள் தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்படும். நவீனத்தொழில்நுட்ப வசதிகளுடன் அமையப்பெற்ற டி ஸ்டுடியோஸ் போஸ்ட் நிறுவனம் முன்னணி இயக்குநர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. டாக்டர் ஐசரி கே. கணேஷ், இயக்குநர் விஜய்யுடன் இணைந்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறை தயாரிப்பிலும் தொழில்நுட்பத்திலும் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெருமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து இயக்குநர் விஜய் பகிர்ந்து கொண்டதாவது, “இந்திய சினிமாவின் இதயத்துடிப்பு சென்னைதான். திரைப்படத் தயாரிப்பின் சில துறைகளில் மும்பை எவ்வாறு முன்னணியில் உள்ளது என்பதை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். அதுதான் இங்கு உலகத் தரம் வாய்ந்த…

Read More

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் ‘ப்ராமிஸ்’

ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம் அதாவது ப்ராமிஸ் .அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது முதலில் ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் ப்ராமிஸ் எனப்படும் அந்த சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தான். இறுதியில் அதுதான் ஜெயிக்கும்.அதனால்தான் நமது தேசியச் சின்னத்தில் ‘சத்தியமேவ ஜெயதே’ ,அதாவது வாய்மையே வெல்லும் என்று எழுதப்பட்டுள்ளது. இந்திய மக்களிடம் புகழ்பெற்ற உண்மையையே பேசிய அரிச்சந்திரனும் அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக இருப்பதை அறியலாம். அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் ப்ராமிஸ். கதையின் நாயகனாக நடித்து இந்தத்…

Read More

Cinema Tour Entertainment மற்றும் B Square Entertainment இணைந்து தயாரிக்கும் புதிய படம்!!

Cinema Tour Entertainment மற்றும் B Square Entertainment இணைந்து தயாரிக்கும் Production no:1 இத்திரப்படத்தை தயாரிப்பாளர் சூர்யாதேவி பாபு தயாரிக்கிறார். இப்படத்தினை நக்கீரன் & ஆனந்த் என்ற இரு இயக்குனர்கள் இணைந்து இயக்குகின்றனர். இப்படத்தினை பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் Clap அடித்து துவங்கி வைத்தார். இத்திரைப்படம் இரண்டு கதாநாயகர்களை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் ‘அப்புச்சி கிராமம்’ படத்தில் நடித்த பிரவீன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் படத்தின் தயாரிப்பளாரான சூர்யாதேவியும் நடிக்கவுள்ளார். இன்னொருவர் விரைவில் தேர்வு செய்யபடவுள்ளார். மேலும் ஜெயபிரகாஷ் , வினோதினி, விஜய் டிவி புகழ் தீபா, சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா டீவி கதிர், மதன், நான் மகான் அல்ல படத்தில் நடித்த மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.…

Read More

காசி விஸ்வநாதர் முதல் கங்கை நதி வரை: ‘தேரே இஷ்க் மே’ படத்திற்காக வாரணாசியை ஒளிரச் செய்த தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் ஆனந்த் L ராய்!

தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28 ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் மற்றும் AR ரஹ்மானின் மனதை வருடும் பாடல்களால், நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்தன. படம் பிரம்மாண்டமாக வெளியாவதை முன்னிட்டு, நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் க்ரிதி சனோன், இயக்குநர் ஆனந்த் L ராயுடன் வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோரின் இந்த பயணத்திற்கு உத்வேகம் அளித்த காசி நகரம், இருவரின் மனதிலும் நீண்ட காலமாக ஒரு…

Read More

“ஹர ஹர மகாதேவ்!”: தேரே இஷ்க் மே படத்திற்காக வாரணாசியில் தனுஷ்.. க்ரிதி சனோனுடன் பகிர்ந்த ஸ்பெஷல் படங்கள்!

இயக்குநர் ஆனந்த் L ராய் இயக்கத்தில், தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முன்பதிவு நாடு முழுவதும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம், ரசிகர்கள் இந்த படத்தை காண எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரணாசியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படக்குழுவினர் அங்கு விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோர் காசியில் படகில் பயணம் செய்து கொண்டே சிரித்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூவருக்கும் இடையே உள்ள…

Read More

அமீரகத்தில் இருக்கும் திறமையாளர்களின் திரையுலக கனவுகளை நனவாக்கும் முக்கிய முன்னெடுப்பு

துபாய் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் டிரிபிள் எம் நிறுவனம், அதன் நிறுவனரும் தொழிலதிபருமான பாபு ராமகிருஷ்ணன் தலைமையில் புதிய முன்னெடுப்பை செயல்படுத்தி உள்ளது. அமீரகத்தில் வசிக்கும் இந்திய மற்றும் இதர திறமையாளர்களின் திரையுலக கனவுகளை நனவாக்கும் நோக்கில் மூவி மேக்கர்ஸ் கிளப்பை டிரிபிள் எம் தொடங்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற மூவி மேக்கர்ஸ் கிளப் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் சிற்பி, நடிகர் பகவதி பெருமாள், நடிகை சௌம்யா மேனன், நடிகர் அப்தல்லா அல் ஜஃபாலி, தொழிலதிபர்கள் வெங்கட், கணேஷ் ஹரி நாராயணன், அனந்த்,திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலர் நிகில் முருகன், டிரிபிள் எம் நிறுவனத்தின் நிர்வாகிகள் மஞ்சுளா ராமகிருஷ்ணன், சந்தோஷ், ஜெகன், கோமதி, மற்றும் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.…

Read More