கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக்டவுன் ‘ திரைப்படத்திற்கு குவியும் வாழ்த்துகள்

லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஷ்கரன் தயாரிப்பில், ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாக் டவுன்’ திரைப்படம் – கோவாவில் நடைபெறும் 56 வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சர்வதேச திரை ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் “லாக்டவுன்” திரைப்படத்தை தயாரித்து வழங்கவுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக சாபு ஜோசப், இசையமைப்பாளராக…

Read More

விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி  ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த,  மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர். வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத்…

Read More

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைபாளர் மரகதமணி, ஹிந்தி நடிகர் அனுபம் கேர் , இ.வி.கணேஷ்பாபு வின் ஆநிரை குறும்படத்தைப்பார்த்து கோவா திரைப்பட விழாவில் பாராட்டு

இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரபூர்வமாக (Official) தேர்வுசெய்யப்பட்டு முதல் நாள் திரையிடலாக இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் கோவாவில் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக இ.வி.கணேஷ்பாபுக்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. ஒவ்வொரு சினிமா கலைஞனும் வாழ்வில் ஒருமுறையாவது. இந்திய சர்வதேச திரைப்பட விழா.கோவாவில் பங்கேற்க வேண்டும். அரிதான பல படைப்புகளும், தரவுகளும், சர்வதேச சினிமா வியாபாரத்துக்கான வாய்ப்புகளும், பொக்கிஷங்களாக கொட்டிக்கிடக்கிறது இங்கே. அப்படிப்பட்ட இடத்தில் எனது படம் தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம் என் வாழ்வில் அற்புதமான தருணம். இரவு பகலாக உழைத்த எனது பட்குழுவுக்கு நன்றி. ஹிந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுபம் கேர் அவர்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்து, படத்தின் பலகாட்சிகளிலும் கைதட்டி உற்சாகப்படுத்தினார். இந்திய சினிமாவின் ஆன்மாவை…

Read More

கதையை மையமாக கொண்ட செர்பன்ட்!!

தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் (Narrative Cut) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட் (Serpent) படம், நரேட்டிவ் கட் கான்செப்டில் தமிழ் சினிமாவில் ஒரு தைரியமான மற்றும் புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது. வழக்கமான முறைகள் மூலம் கதையை முன்வைக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளை பயன்படுத்தி படத்தின் மையக்கரு, திரைக்கதை ஓட்டம் ஆகியவற்றை காட்சி ரீதியாக தெரிவிக்க பாபி ஜார்ஜ் முயன்றுள்ளார். இது ஒரு குறும்படமோ அல்லது பைலட்டோ போல் இல்லாமல், முழு ஸ்கிரிப்ட்டிற்கான சினிமாடிக் பார்வையை வழங்குகிறது. கதை தான் மையமாக இருக்க வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், பரிச்சயமான நடிகர்கள் அல்லது விரிவான இடங்களுக்கு பதிலாக புதிய முகங்களை…

Read More

மாஸ்க் – திரை விமர்சனம்

நகரின் மையப் பகுதியில் உள்ள பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை நடக்கிறது.அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அள்ளுகிறார்கள். அரசியல்வாதி பவனால் ஓட்டு போடுவதற்கு மக்களுக்குக் கொடுப்பதற்கும் தேர்தல் செலவுக்குமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் அது. சிலர் நடிகர் எம் ஆர் ராதாவின் முகமூடி அணிந்து கொண்டு இந்த கொள்ளையை நடத்துகிறார்கள். கொள்ளை போன பணம் யாரிடம் இருக்கிறது என்பதை கண்டறிய தனியார் டிடெக்ட்டிவ் நபரான கவின் வருகிறார். சமூக சேவைகள் என்ற பெயரில் சமூக விரோத செயல்களைய செய்யும் ஆண்ட்ரியாவும் வருகிறார். இவர்கள் இருவரும் தீவிரமான தேடுதலில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் அவர்களும் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கிறார்கள். இவர்களில் பணம் யார் வசம் கிடைத்தது? என்று சொல்வதே ’ மாஸ்க்’ படத்தின் மீதிக்கதை. படத்தின் முதல் காட்சியில் தொடங்கும்…

Read More

நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் வழங்கும் மியூசிக்கல் எண்டர்டெயினர் ‘டெக்சாஸ் டைகர்’ – சென்னையின் வண்ணமயமான பின்னணியில் பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. யுகே ஸ்குவாட் பேனரின் கீழ், ‘ஃபேமிலி படம்’ புகழ் இயக்குநர் எழுதி, இயக்கி வரும் திரைப்படம் ‘டெக்சாஸ் டைகர்’. இளமை துள்ளலாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன் (‘ட்யூட்’, ’தக்ஸ்’, ‘பேட் கேர்ள்’, ‘ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’, ‘முரா’ ஆகிய திரைப்படங்கள் புகழ்) மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் (Mr. பாரத், ஐ அம் தி கேம்) ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில் அறிவிப்பு…

Read More

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்

இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பிரபல பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மணை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மூத்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய ஆட்சி மன்றக் குழுவில் இடம் பெற்றுள்ளது குறித்து மாலதி லக்ஷ்மண் மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்த மாலதி லக்ஷ்மண், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக தன்னை நியமித்ததற்காக நன்றி தெரிவித்து முதல்வரின் வாழ்த்துகளை பெற்றார். நியமனம் குறித்து பேசிய அவர், “அரசு அளித்துள்ள…

Read More

VR Dinesh & Kalaiyarasan’s ‘Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video — Tamil Version Gains Massive Buzz Nationwide

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India. Originally released in theatres on September 19, the film stars V R Dinesh and Kalaiyarasan in the lead roles and is directed by Athiyan Athirai. Inspired by true events, Thandakaaranyam follows the journey of Murugan (Kalaiyarasan), who joins a military training camp for a special anti-Naxal unit. Determined to overcome both physical and emotional challenges, he pushes himself to the…

Read More

மிடில் கிளாஸ் – திரை விமர்சனம்

நடுத்தரக் குடும்பங்களின் ஒட்டுமொத்த கனவே பணத் தேவையாகத்தான் இருக்கும். மற்றவர் முன் தங்களை உயர்வாக காட்ட விரும்பும் இவர்களில் சிலர் தங்கள் ஆடம்பர கனவுகளுக்கு வடிவம் கொடுத்து கடனில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அதிலும் குறிப்பாக உறவினர்கள் பணம் படைத்தவர்களாக இருக்க, அவர்களுக்கு இணையாக தங்களை காட்டிக் கொள்ளும் முனை ப்பில் இதே நடுத்தர குடும்பம் பந்தாவுக்கு செலவழித்து நொந்து போனதும் உண்டு. இதற்கெல்லாம் மேலாக பெருமைக்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுகிற மனைவி மட்டும் இதே நடுத்தர குடும்பத்தில் அமைந்துவிட்டால் கணவன் கடன் வாங்கியே காலாவதியாகி விடுவான். இங்கே நம் கதையின் நாயகனுக்கோ கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமிக்கோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும் என் பது லட்சியம். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி…

Read More

தீயவர் குலை நடுங்க — திரை விமர்சனம்

கொஞ்ச இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு துப்பறியும் கதை. அதை யூகிக்க முடியாத சஸ்பென்ஸோடு சொல்லி இருக்கிறார்கள். பிரபல எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் விசாரிக்கிறார். இந்த விசாரணை ஒரு கட்டத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷி டம் வந்து நிற்கிறது. இந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியை. திருமணமாகாத இவர் திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிக்கிறார். அவரைப் பற்றி முழுசாக தெரிந்து கொள்ள பழகத் தொடங்குகிறார். இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி அர்ஜூன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் வருங்கால கணவராக கருதப்படும் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்புக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கிறார். அது…

Read More