நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார். அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ்…

Read More

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ‘சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

சென்னை: தென்னிந்திய சினிமாவில் தரமான தயாரிப்புகளுக்கும் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் படங்களை கொண்டு போய் சேர்க்கும் உத்திக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது . சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும் அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் கலவையாக இருக்கும். நடிகர் சந்தீப் கிஷனை இந்தத் திரைப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கலாம். மொழி எல்லைகள் கடந்து ரசிகர்கள் மத்தியில்…

Read More

மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !!

The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க். 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., நடிகை ருஹானி சர்மா பேசியதாவது.., எல்லோருக்கும் வணக்கம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் சார் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது.…

Read More

குனீத் மோங்கா கபூரின் சீக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இணையும் புதிய தமிழ் படம்!

ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது. குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, ’தி லஞ்ச்பாக்ஸ்’, ’மசான்’, ’பாக்லைட்’ மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற ’காதல்’ போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில்…

Read More

கிறிஸ்டினா கதிர்வேலன் — திரை விமர்சனம்

தலைப்பை பார்த்ததுமே இரு மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள். இவர்களுக்கு திருமணம் என்று வரும்போது அவரவர் மதங்கள் முட்டி மோதிக் கொள்ளும் என்று தோன்றுகிறது அல்லவா. அதுதான் இல்லை. படத்தில் மதத்துக்கு எந்த ஒரு இடத்திலும் மதம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம் அதுவே படத்தை வேறு கோணத்தில் அழகாக இட்டுச் சென்று விடுகிறது. கதை இதுதான். கல்லூரி மாணவி கிறிஸ்டினாவை அதே கல்லூரியில் படிக்கும் மாணவன் கதிர்வேலன் விரும்புகிறான். ஆரம்பத்தில் இது விஷயத்தில் அசிரத்தையாக இருந்த நாயகி, போகப் போக நாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுகிறாள். இந்த சூழலில் இதே கல்லூரியின் இன்னொரு காதல் ஜோடிக்கு ரகசியமாய் பதிவு திருமணம் நடத்த சக மாணவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த கல்யாணத்துக்கு சாட்சியாக நாயகன் நாயகி இருவரும் தங்கள் அடையாள அட்டைகளை சமர்ப்பிக்கிறார்கள். ஆனால்…

Read More