காதலும் உயிரும் ஒன்று. அதற்காகத் தான் Vowels என்ற டைட்டில்

‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே பேசியதாவது, “இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். பார்வையாளர்களும் படம் பார்க்கும்போது அதை உணர்வார்கள்” என்றார்.

கலை இயக்குநர் மதி, “படத்தின் தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. ஐந்து இயக்குநர்கள் ஒன்றாக பணியாற்றிய படத்தில் நான் பணிபுரிந்திருப்பது இதுதான் முதல்முறை. என்னுடைய டீம் அனைவருக்கும் நன்றி”.

இசையமைப்பாளர் சரவணா சுப்ரமணியம், “படத்தின் ஐந்து இயக்குநர்களுக்கும் நன்றி. எனக்கு அற்புதமான வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். காதலும் உயிரும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது. அதை மையமாகக் கொண்டுதான் ‘Vowels’ என படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளது. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர் ராஜூ சாருக்கும் உத்ரா புரொடக்ஷன்ஸூக்கும், யூகி சேதுவுக்கும் நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் சங்கீத், “இதுதான் எனக்கு முதல் மேடை. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. பொதுவாக, காதலில் ஒரு உணர்வை வைத்துதான் முழு படத்தையும் உருவாக்குவார்கள். ஆனால், நாங்கள் ஐந்து விதமான உணர்வுகளை வைத்து ஒரே படமாக கொடுத்திருக்கிறோம். படத்தில் உள்ள 7 பாடல்களும் நன்றாக வந்துள்ளது. படமும் சிறப்பாக வந்துள்ளது. வரும் 13 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ரவி, “அறிமுக இயக்குநர்களான எங்களுக்கு யூகி சேது சார் நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என் நடிகர்கள், படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்தப் படத்தில் இசை முக்கியமான பங்கு வகிக்கிறது. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

இயக்குநர் ஹேமந்த் குமார், “தயாரிப்பாளர்கள் ராஜூ சார், ஹரி உத்ரா அவர்களுக்கும் நன்றி. சிறப்பாக ஒத்துழைத்த என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் ஜெகன் ராஜேந்திரன், “தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. என் முதல் படத்தில் நடித்த ராஜ் அய்யப்பா ப்ரோவுக்கு நன்றி. கதையை உள்வாங்கிக் கொண்டு அதை திரையில் அழகாக பிரதிபலித்த அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் நன்றி. மார்ச் 13 அன்று வெளியாகும் இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவரையும் எண்டர்டெயின்மெண்ட் பண்ணும்” என்றார்.

நடிகர் ராஜ் அய்யப்பா, “படத்தின் டிரெய்லரை அனைவரும் பார்த்திருப்பீர்கள். டிரெய்லர் பிடித்திருப்பது போலவே படமும் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன். மொழிகள் கடந்து இந்தப் படத்தை யார் பார்த்தாலும் எமோஷனலாக கனெக்ட் செய்து கொள்ள முடியும். மார்ச் 13 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.

இயக்குநர் திலிப், “யூகி சேது சார், சின்னி ஜெயந்த் சார் போன்றோருடன் பணிபுரிந்தது எங்கள் பாக்கியம். நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம். படத்தில் இருக்கும் எண்டர்டெயின்மெண்ட் எல்லாம் திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்” என்றார்.

நடிகர் சின்னி ஜெயந்த், “இந்தப் படக்குழு மிகவும் தைரியமானது. கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்க்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதைவிட யூகி சேது நடித்திருப்பதுதான் பெரிய பலம். அடுத்து அனைவரும் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுவோம் என வாழ்த்துகிறேன்”.

நடிகர் யூகி சேது, “இந்தப் படத்தின் டிரெய்லர் கதைக்கருவையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. மிமிக்ரியில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். காதலைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். இசையமைப்பாளர் சரவணா மிகச்சிறந்த இசையமைப்பாளர். படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், போஸ்டர் டிசைனர் என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். குறும்படங்களும் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்தப் படம் இருக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

விநியோகஸ்தகர் ஹரி உத்ரா, “மார்ச் 13 அன்று இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு சென்று இன்றைய ஜென் ஸீ தலைமுறை பார்க்க வேண்டும். அடல்ட் மற்றும் வன்முறை நிறைந்த படங்களே அதிகம் வருகிறது. உணர்வுப்பூர்வமாக சரியான படத்தை எடுக்க இன்று இயக்குநர்கள் குறைவு. அதை இந்த ஐந்து இயக்குநர்களும் சரியாக எடுத்திருக்கிறார்கள். சின்னி ஜெயந்த் சார் மற்றும் யூகி சேது சார் இருவரும் இந்தப் படத்திற்கு பெரிய பலம். எல்லோரும் இந்தப் படத்தை மிஸ் பண்ணாம திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். படத்தை சரியான முறையில் புரோமோட் செய்த சுரேஷ் சந்திரா சார் மற்றும் அப்துல் நாசர் சாருக்கு நன்றி” என்றார்.

Related posts

Leave a Comment