ஸ்டோன் பென்ச், ஜி ஸ்குவாட் தயாரிப்பில் உருவாகும் ‘மேயாத மான் 2’

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மேயாத மான்’. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி கிட்டதட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மேயாத மான் 2’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. இது குறித்து இயக்குநர் ரத்ன குமார் கூறும் போது, ‘மேயாத மான் 2’ குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. ‘மேயாத மான்’ வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையில் ‘ஆடை’, ‘குலுகுலு’, ’29’ ஆகிய திரைப்படங்களை இயக்கியும் எழுத்தாளராக…

Read More

‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக பீட்சா பாய்ஸ் உருவாகியுள்ளது. சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கதை, இயக்கம் மற்றும் இசைப் பொறுப்புகளை சேகர் கேசவ் சிரின் ஏற்றுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் சிவம் சங்கர். இப்படத்தில் சரத் லோகிதாஸ்வா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகராஜ் என்ற காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஷோப்ராஜ் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 4 அன்று வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சஹானா சங்கர், “எங்கள் மகனின் கனவுக்காகவே இந்த படம் தொடங்கப்பட்டது. தற்பொழுது ஏஐ காரணமாக நிறைய வேலை வாய்ப்புகள் பறிபோகிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை இந்தப் படம் மூலம் தர வேண்டும் என்றும் விரும்பினோம். இது எங்களுடைய முதல்…

Read More