கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகவுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய பாடலான ‘ கூல் (கிங் வெர்ஷன்)’ மூலம் நடன அரங்கையே அதிர வைத்துள்ளனர் ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர்! ‘து மில் ஜாயே’ பாடலில் காதல் நாயகனாகவும் அதிரடி ஆக்ஷன் அவதாரத்திலும் ரசிகர்களைக் கவர்ந்த ஷாருக்கானின் ‘கிங்’ திரைப்படத்தின் அடுத்த பரிமாணம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் புதிய பாடலான ‘டாடி கூல் (கிங் வெர்ஷன்)’ ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஷாருக்கானுடன் கரீனா கபூர் கான் இணைந்துள்ளார். இந்தி சினிமாவின் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இந்த ஜோடி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உற்சாகமான இசை, கவர்ச்சியான ரிதம், ரெட்ரோ நடன அசைவுகள் என உலகப் புகழ்பெற்ற ‘டாடி கூல்’ பாடலுக்கு புதிய பாலிவுட் வண்ணம் கொடுத்துள்ளனர்.…
Read MoreDay: November 28, 2026
115 புத்தகங்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த.கவிஞர் விவேகா
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் கற்றல் பதிப்பகம் சார்பில் தயாரான 115 புத்தகங்களை கவிஞரும், பாடலாசிரியருமான விவேகா வெளியிட்டு, உலக சாதனை படைத்த நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 14-ஆம் தேதியன்று ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளும் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கான பிரத்யேக கலையரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கத்தில் கற்றல் கல்வி மையத்தின் நிறுவனரும், கல்வியாளருமான ஸ்ரீ ரோகிணி தலைமையில் கற்றல் பதிப்பகம் பதிப்பித்த 115 புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான விவேகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒரே தருணத்தில் 115 புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்,அரபி, பிரஞ்சு, மலையாளம், ஆங்கிலம்…
Read More