சென்னை சீக் பவுண்டேஷன் (Seek Foundation)கோத்தகிரி மற்றும் கூடலூர் பழங்குடியினர் சமூகத்துக்கு 50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், சரக்கு வாகனம் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளனர்.இது பற்றிய விவரம் வருமாறு: பழங்குடியினர் சமூகங்களின் நிலையான முன்னேற்றத்தையும் நலனையும் மேம்படுத்தும் நோக்கில், ‘சீக் பவுண்டேஷன்’ என்கிற நிறுவனம், அதன் நிறுவனர் டாக்டர் விமலா பிரிட்டோ அவர்களின் தலைமையில், ஒரு ஆம்புலன்ஸ், ஒரு சரக்கு வாகனம் மற்றும் பல தையல் இயந்திரங்களை கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளின் பழங்குடியினர் மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த விழா சென்னை செயின்ட் பிரிட்டோஸ் அகாடமி (SBA)யில் நடைபெற்றது. இதில் நீலகிரி வாழ் பழங்குடியினர் நலச் சங்கத்தின் (NAWA) செயலாளர் திரு. ஆல்வாஸ் மற்றும் ‘Seek Foundation’ தலைமை நிர்வாக அதிகாரி, திரு. தாமஸ் பொன்ராஜ், செயிண்ட் பிரிட்டோஸ் அகாடமியின் முதல்வர் திருமதி…
Read MoreDay: November 13, 2025
கிச்சா சுதீப் நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு!
கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் MARK திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி கட்டத்தில், 200 அடி நீளமுடைய மாபெரும் கப்பல் செட் அமைக்கப்பட்டு, அதில் நடைபெற்ற பாடல் படப்பிடிப்பில் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் 300 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக படத்தை உருவாக்க தயாரிப்பு குழு முழு மனதுடன் செயல்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களான நவீன் சந்திரா, யோகி பாபு, குரு சோமசுந்தரம், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இதன் மூலம் MARK திரைப்படம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது வெளியீட்டுக்காக பிந்தைய பணிகளில் இறங்கியுள்ளது.
Read Moreசெலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு பிரபலங்கள் பங்கேற்பு
திறமைவாய்ந்த இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் ‘புர்கா’ மற்றும் ‘லைன்மேன்’ உள்ளிட்ட பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து ‘கிணறு’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கியுள்ள ‘கிணறு’ குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகி ஆறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இப்படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு திரைப்பிரபலங்கள் பங்கேற்று படத்தைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர். பெகாசஸ் திரைப்பட விழா 2024, அக்கலேட் உலகளாவிய திரைப்படப் போட்டி, இண்டிஃபெஸ்ட் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட விழாக்களில் சிறந்த படம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திற்கான விருதுகளை பெற்ற ‘கிணறு’, சென்னை சர்வதேச திரைப்பட விழா 2024ல் உலக…
Read More“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
MISHRI ENTERPRISES சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”. சமீபத்தில் இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., தயாரிப்பாளர் H முரளி பேசியதாவது.., இது எங்கள் குடும்ப விழா. எனக்கு செயின்ராஜ் சார் குடும்பத்தை 40 வருடமாகத் தெரியும். இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போது அவர் இல்லை என வருத்தமாக இருக்கிறது. கிஷன் ஒரு ஹீரோவாக வேண்டும் என அவர் அதிகம் ஆசைப்பட்டார். அவரது…
Read Moreமகளிர் உலக கோப்பையின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!
இந்திய நாடே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ள, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) பிரம்மாண்ட பிக்கில் பால் (Pickle Ball) நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். சமீபத்தில் உலகின் பலமான 8 அணிகள் கலந்துகொண்ட உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், அசத்தலாக விளையாடியதுடன், அணியை வழிநடத்தி, இந்தியா மகளிர் அணிக்கு முதல் உலககோப்பையை பெற்றுத் தந்து, இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர். இந்தியாவெங்கும் மகளிருக்கு முன்னுதாரண முகமாக மாறியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கோப்பையின் வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக சென்னை வருகை புரிந்துள்ள நிலையில், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சென்று பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr. மரியாசீனா ஜான்சன் மற்றும்…
Read More