சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் (FIAPF) அங்கீகரிக்கப்பட்ட ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவாக வகைப்படுத்தப்பட்ட எஸ்டோனியாவில் நடைபெறும் தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழா, அதன் 29வது பதிப்பை எஸ்டோனியாவின் தாலினில் நிறைவு செய்தது. இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமான முதல் சிறப்புப் போட்டி நடுவர் குழுவில் பணியாற்ற பிளாக்பஸ்டர் ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம் நியமிக்கப்பட்டார். இளங்கோ ராமின் திரைப்படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) 2023 ஆம் ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு சிறப்பு நடுவர் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போட்டிப் பிரிவில் நடுவர் குழு உறுப்பினராக 2025 இல் அவர் நியமிக்கப்பட்டிருப்பது கெளரவமாகும். இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழு…
Read MoreDay: November 30, 2025
ஐ பி எல் – திரை விமர்சனம்
மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விட்டதாக தவறாக சந்தேகப்பட்டு அவனை காவல் நிலையம் கொண்டு சென்று தாக்குகிறார். இந்த தாக்குதலில் அந்த இளைஞன் இறந்து போக… கொல்லப்பட்டவனின் செல்போனை ஆராயும் போது அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்ட பரபரப்பான வீடியோ இருப்பதைப் பார்க்கிறார். இது விஷயம் சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிக்குப் போக…இப்போது காட்சி மாறுகிறது. அந்த லாக்கப் மரணத்திற்கு வாடகை கார் ஓட்டும் அப்பாவி கிஷோர் மீது பழி போட்டு அவரைக் கைது செய்கிறார்கள். மேலிடத்து அழுத்தத்தால் அவரை அடித்து நொறுக்கி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள். கிஷோரின் தங்கையை நாயகன் டிடிஎஃப் வாசன் காதலிக்கிறார். அந்த உரிமையில் கிஷோர் மீதான பொய் வழக்கை உடைத்து நீதியை நிலை நாட்ட அதற்கான ஆதா…
Read MoreB. P. 180 – திரை விமர்சனம்
வடசென்னை காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன். விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் உடற்கூறாய்வில் வயிற்றில் மூன்று மாத கரு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்தப் பெண் திருமணமாகாதவள் என்பதால் கரு பற்றி ரகசியம் காக்கும் படி போன் வடிவில் ஏகப்பட்ட பிரஷர். அதில் ஏகப்பட்ட மிரட்டல்களும் அடங்கும். எந்த மிரட்டலுக்கும் பணியாததால் ஒரு கட்டத்தில் அவரை தீர்த்து கட்டவும் துணிகிறார்கள். விபத்தில் இறந்து போனது அந்தப் பகுதியில் பிரபல ரவுடி டேனியல் பாலாஜியின் உறவுக்கார பெண் என்பதால் அவரும் தன் பங்குக்கு நாயகியை மிரட்டுகிறார். நாயகியோ கொஞ்சமும் பயப்படாமல் ‘நீ சரியான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா’ என்கிறார். இந்த சவாலை ஏற்று கொலை பாதகத்துக்கு கொஞ்சமும் அஞ்சாத டேனியல் பாலாஜி வந்தாரா? அதன் பின் என்னென்ன நடந்தது என்பது…
Read Moreரஜினி கேங் – திரை விமர்சனம்
ரேடியோ சவுண்ட் சர்வீஸ் நடத்தும் ரஜினி கிஷனும் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் மகள் த்விவிகாவும் காதலிக்கிறா ர்கள். காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று தெரிந்ததும் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன. அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு பின்னணியில் மணப் பெண்ணின் தாலி இருக்கிறது. அந்த தாலி கணவனை நெருங்க விடாமல் துரத்துகிறது. கூ ச்சலிடுகிறது. ‘எவண்டா எனக்கு இந்த தாலியை கட்டியது?’ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. அப்படியானால் இது ஆவியின் சேட்டையா என்ற கேள்வி எழும் அல்லவா. உண்மையில் அந்த தாலி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதை கட்டிய பிறகு மணமகளிடம் அந்த எதிர்பாராத மாற்றம் ஏன்? கேள்விகளுக்கு விடை எதிர்பாராத கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், நடனம்,சண்டை என எல்லா ஏரியாவிலும் புகுந்து…
Read More