Draft by GKB தனது முதல் தயாரிப்பான Production No.1–ஐ அதிகாரபூர்வமாக அறிவிக்க பெருமைப்படுகிறது. சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த புதிய படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் சிறந்த நடிகர் பட்டாளம் இணைகின்றது. இன்று நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர்கள் H. வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர். தயாரிப்பாளராக இயக்குனர் கணேஷ் கே பாபுவின் முதல் படைப்பு இது. இந்த படம், தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கும் கணேஷ் கே பாபு அவர்களின் முக்கிய தருணமாகும். ‘டாடா’ வெற்றிப் படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்ட அவர், தற்போது தான் இயக்கும் அடுத்த படமான **‘கராத்தே பாபு’**வில் பிஸியாக பணிபுரிந்து வருகிறார். இந்தப்…
Read More