ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதை வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக தயாரித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு படத்துடன் வந்திருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும். ‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்தோடு வருகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கியமான…

Read More

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ இரண்டு கலாச்சாராங்களை ஒன்றிணைக்கிறது. மும்பை, 24 பிப்ரவரி 2026: குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகள், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தருணங்கள் அல்லது வீட்டைத் தாண்டிய தொலைதூர உலகங்களில் என எதிர்பாராத இடத்தில் இருந்துதான் கனவுகள் தொடங்குகின்றன. செண்பாவுக்கும் இது விதிவிலக்கல்ல! தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையை தாண்டி, ஒருநாள் தென் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது. அந்த கனவு நனவாகும் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் ‘மேட் இன் கொரியா’ நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் எழுதி…

Read More

ஜென் ஸீ தலைமுறையை கவர்ந்திழுக்கும் ஹர்ஷவர்தனின் ‘ மாயம் நீயடி’ மியூசிக் வீடியோ ஆல்பம்

பாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசை கலைஞர்கள் புது சிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது. இதனை உணர்ந்த பாடகர் – நடிகர் – இசை கலைஞர் ஹர்ஷவர்தன் ‘ மாயம் நீயடி’ எனும் மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். ஹர்ஷவர்தன் இந்த மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கான பாடலுக்கு இசையமைத்து, பாடி, ஆடி நடித்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் பாடி இருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன்…

Read More

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து…

Read More