மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’ உலக டிஜிட்டல் வெளியீடு!

ZEE5, ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் அறிவித்தது! இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-ல் வெளியாகிறது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது. லிங்க் – https://www.youtube.com/watch?v=FRTJ8TWC78g Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல்,…

Read More

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இணையத்தை கலக்கும் அசத்தலான இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படம் #சூர்யா46 தற்போது அதிகாரப்பூர்வமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரே சொல்வது போல், இப்படம் ஒரு அழகான, உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சூர்யா ஒரு குழந்தையுடன் தோன்றும் காட்சி, ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை எழுப்பும் வகையில் நெகிழ்ச்சியும், நம்பிக்கையும் கலந்த இனிய உணர்வை தருகிறது. முன்னதாக ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெம்கி அட்லூரி (Venky Atluri) இந்தப் படத்தை இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் வல்லவரான இவர், இந்தப் படத்திலும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான திரை அனுபவமாக…

Read More

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். *ஒளிப்பதிவார் வேதராமன் சங்கரன்* அவர்கள் பேசும்போது, ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக…

Read More

விஸ்வராகம் பாகம் 2 : இசை நினைவஞ்சலி

காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு. அவை நம்முள் ஒரு தாக்கத்தை மட்டும் உருவாக்குவது அல்ல, வாழ்நாள் துணையாகவே மாறிவிடும். நம் ஆனந்தம், துயரம், சொல்ல முடியாத ஏக்கம் — எல்லாவற்றிலும் அவை ஒலித்துக்கொண்டே இருக்கும். வாணி ஜெயராம் அவர்களின் குரல் அப்படிப்பட்ட ஒரு அரிய பொக்கிஷம். அவரின் மறைவின் மூன்றாம் ஆண்டு நினைவாக, விஸ்வராகாம் – பாகம் 2 ஒரு பணிவான நினைவஞ்சலியாக சமர்ப்பிக்கப்படுகிறது. இசையில் அவர் வெளிப்படுத்திய அதே நயமும், உண்மையும், இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு நொடிகளிலும் பிரதிபலிக்கின்றன. 🎼 விஸ்வராகம் பாகம் 2 : இசை நினைவஞ்சலி இந்த இசைத் தொகுப்பின் மையத்தில், தென்னிந்திய சினிமாவின் உணர்ச்சிப் பிம்பத்தை உருவாக்கிய மகா இசையமைப்பாளர் M. S. விஸ்வநாதன் (MSV) அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தலைமுறைகளைத் தாண்டி வாழும் அவரது மெட்டுகள்,…

Read More

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ பட பூஜை இன்று கோலகலமாக நடைபெற்றது!!

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை இன்று எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது. இன்று நடைபெற்ற பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலைச் சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்லவுள்ளது. இந்தப் படத்தில் தருண்…

Read More