கதை… சுதர்சன் கோவிந்த் – நாயகன் அர்ச்சனா ரவி – நாயகி அம்மா வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டு பின்னர் கணவன் கைவிட்டதால் வீட்டிற்கு திரும்பி வருகிறார்.. அதன் பிறகு தாத்தா ஒய் ஜி மகேந்திரன் கண்டிப்பில் வளர்கிறார் நாயகன் சுதர்சன்.. இதனால் காதலிப்பதை தவிர்த்து வருகிறார்.. இந்த சூழ்நிலையில் நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப் டெவலப் செய்கிறார்.. ஆனால் காதல் அனுபவம் இல்லாத காரணத்தினால் இவரது அலுவலகத்தில் இவரது ஆப் டெவலப்புக்கு போதுமான ஆதரவு இல்லை.. எனவே ஒரு காதலை தேடி அலைகிறார்.. இயக்குனராக ஆசைப்படுகிறார் நாயகி அர்ச்சனா.. அப்போது ஒரு காதல் கதையை எடுத்து வர சொல்கிறார்கள்.. காதல் அனுபவம் இருந்தால் இன்னும் எளிதாக கதையை எழுதலாம் என்பதற்காக பொய்யான ஒரு காதலை தேடி செல்கிறார்…
Read MoreDay: March 27, 2026
Project Hail Mary – விமர்சனம்
உலகத்தையே தனி ஆளாகக் காப்பாற்றுகிறான் அமெரிக்க நாயகன் என்ற ஹாலிவுட் ஃபார்முலாவில் வந்திருக்கும் மற்றொரு படம். ஆனால் வழக்கமான ஹாலிவுட் மசாலாவாக இல்லாமல் ஸ்லோவாகப் பயணிக்கும் ஒரு கிளாஸிக்கான படமாக வந்துள்ளது ப்ராஜெக்ட் ஹெயில் மேரி. இப்படத்தை லார்ட் மில்லர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் இரட்டையர்களான பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளனர். சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங் நிறுவனத்தால் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. *கதை…* ஆஸ்ட்ரோஃபேஜ் (Astrophage) எனும் நுண் உயிரிகள் சூரியனின் ஒளியை மெல்ல மங்கச் செய்கிறது. அதனால் அடுத்த 30 வருடங்களில் பூமியின் வெப்பம் பத்திலிருந்து பதினைந்து டிகிரி அளவிற்குக் குறைந்து பெரும் பாதிப்புகளை விளைவிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. அதை எப்படியேனும் தடுக்கப் பார்க்கிறார்கள் ஈவா ஸ்ட்ராட்டால் ஒருங்கிணைப்படும் விஞ்ஞானிகள். பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கும் மூலக்கூறு…
Read More
