தாரகை முத்தமிழ் கழகம் ஏற்பாட்டில் கடந்த ஞாயிறு, மே 10ஆம் தேதி ஊட்லண்ட்ஸ் நூலகத் திரையரங்கில் ரிலீஸ் ஆனது. சிங்கப்பூர் மலாய் வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர் முனைவர் அப்துல் மாலிக் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் சமூகத்திற்குத் தொடர்ந்து ஆற்றி வரும் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனத் தலைவர் திரு. சிராஜுதீனுக்கு ‘சமூகக் கலைச் செம்மல்’ விருதினை சிறப்பு விருந்தினர் வழங்கிக் கௌரவித்தார். மேலும், இப்படத்தின் சமூகத் தாக்கம் மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இயக்குநர் மில்லத் அகமதுவுக்கு ‘சிறந்த ஆவணப் படம்’ விருதும் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 16-ஆம் தேதி மலேசியா கோலாலம்பூரில் இப்படத்தைத் திரையிடவுள்ள ரெயின்போ ஈவென்ட்ஸ் அமைப்பாளர் திருவாட்டி ரசிதா பேகம், படத்தின் சுவரொட்டியைப் பெற்றுக்கொண்டார். எனக்குத் தமிழ்…
Read MoreDay: May 22, 2026
இந்திய சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் புராண அதிரடி சாகச படமான ‘நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது
நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘நாக பந்தம்’. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாக பந்தம்’- புராணம் – சாகசம் – பண்டைய ரகசியங்கள்- தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு பிரம்மாண்டமான காட்சி அமைப்பில் உருவாகி, இதுவரை கண்டிராத தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது. NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன், ஒரு உண்மையான பான்…
Read Moreசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்
வரவிருக்கும் இசை நாடகமான ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மே 21 அன்று வெளியிட்டார். இது படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத தருணமாகும். மூத்த திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில், E5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகெங்கும் வெளியிடும் ‘சாருகேசி’, இசை, உணர்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு ஆன்மாவைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இப்படத்தில் ஒய் ஜீ மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழம்பெரும் இசையமைப்பாளரான தேனிசை தென்றல் தேவாவின் இசை, படத்தின் உணர்வு ஆழத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது. அவரது இசையமைப்புகள் பார்வையாளர்களின் மனதில் ஒரு…
Read More