இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் “ரஞ்சன்” படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ்பிரபாகர்,மோகன்லால் உட்பட பலர் நடிக்கிறார்கள். பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரியும், நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள். இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் வீரியத்தை சொல்லும் விதமாக பரபரப்பாக கோர்ட் ஷூட்டிங் நடக்கும் போது கேமராமேன் ரவியாதவ் பிறந்த நாள் சர்ப்ரைஸ் நிகழ்வு நடைபெற்றது. திடீரென செட்டுக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞ்ர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பரபரப்பாக நடைபெறும் இந்த படத்தில் சொல்லப்படும் கருத்து சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read MoreDay: May 29, 2026
காட்டாளன் – விமர்சனம்
கதை… புஷ்பா பட கதையை போல காட்டுக்குள் நடக்கும் ஒரு கதை தான்.. ஆனால் அதில் சந்தன மரக் கடத்தல் இருக்கும்.. இதில் யானை தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விற்கும் கும்பல் கதை.. சட்டவிரோதமாக யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பி கோடி கோடியாக சம்பாதிக்கிறார் சுனில்.. இதனால் இவருக்கு பல கும்பல்கள் மிரட்டல் கொடுக்கின்றனர்.. ஒரு பக்கம் காவல்துறையும் மிரட்டுகிறது.. ஆனாலும் தன் காட்டுக்குள் தனி ஆளாக உயர்ந்து நிற்கிறார்.. ஒரு கட்டத்தில் இவருக்கு பக்கபலமாக வந்து சேர்கிறார் ஆண்டனி வர்கீஸ்.. இதனால் கடத்தல் சாம்ராஜ்யத்தில் உயர்ந்து கொடி கட்டி பறக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இன மக்களுக்கு உதவி தேவைப்பட சுனிலின் உதவியை நாடுகிறார் ஆண்டனி.. ஆனால் இவருக்கு ஏமாற்றம் வரவே சுனிலை எதிர்க்க துணிகிறார் ஆண்டனி வர்கீஸ்.. அதன் பிறகு…
Read MoreBLAST விமர்சனம்..குடும்ப ஆக்சன் திரைப்படம் [. 4.5/5.. ]
கதை… தனது மனைவி அபிராமி.. மகள் ப்ரீத்தி.. தம்பி விவேக் பிரசன்னா ஆகியோருடன் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கராத்தே மாஸ்டர் அர்ஜுன்… சிறுவயது முதலே தன் மகளுக்கு கராத்தே கற்றுக் கொடுத்து அநியாயத்தை தட்டிக் கேட்கும் மனப்பக்குவம் என்றும் வேண்டும் என தைரியப் பெண்ணாக வளர்த்து வருகிறார்.. இதனால் அடிக்கடி பல அடிதடி பிரச்சனைகளை வீட்டுக்கு கொண்டு வருகிறார் ப்ரீத்தி.. இதனால் கோபமடைகிறார் அபிராமி.. பெண்ணுக்கு வரன் பார்க்கும் நேரத்தில் இதுபோல பிரச்சனைகளை கொண்டு வந்தால் மகனின் வாழ்க்கை பாதிக்கப்படும் என எண்ணுகிறார்.. இந்த சூழ்நிலையில் வில்லன் ஜான் கொக்கேன் மூலம் இவரது குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை வருகிறது.. ஆனால் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் அர்ஜுன் குடும்பத்திற்கு வரவே அந்த குடும்பம் என்ன செய்தது.? பெரிய ரவுடி கும்பலை இவர்களால் எதிர்த்து போராட…
Read Moreஇந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் !!
இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ – டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இப்படத்தில்…
Read Moreலைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவன தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் பகிர்ந்து கொண்டதாவது, “‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஜூலை 31 என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று…
Read Moreகரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்
தெளிவான திட்டமிடலுடன் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை மக்கள் வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் “கதை கிளப்”, என வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பொழுதுபோக்கு துறையில் நுழைகிறது கதைஷார்ட்ஸ் சென்னை, மே 29, 2026: வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் – ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை கரண் தயாநிதி மாறன் இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். ‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு…
Read More