ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS. நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மனதை வருடும் இசையையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பிறகும் அதன் தாக்கம்…

Read More

‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவு மகிழ்ச்சியில் பிறந்தநாள் கொண்டாடிய தயாரிப்பாளர்!

ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும்.ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல செயல் நிறைவு பெற்ற அந்த திருப்தியும் நிறைவும் இருந்தால் அந்த பிறந்தநாள் கொண்டாட்ட மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும்.அப்படி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் M.கார்த்திகேசன். ‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்த இவர், தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஒரு தயாரிப்பாளராக நடிகராக அறிமுகமான M. கார்த்திகேசன் முதன் முறையில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக அவரே நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரேம்குமார்…

Read More

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’ – ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். “கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங்கிய அதே அன்பையும்  ஆசீர்வாதத்தையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று…

Read More