மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சமீபத்தில் தொடங்கியது. ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ,…
Read MoreDay: June 17, 2026
*’திரிஷ்யம் 3′ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை*
மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சமீபத்தில் தொடங்கியது. ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ,…
Read More*‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !*
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் (Era Entertainment) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.…
Read Moreநடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார். ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் சாரதி பேசுகையில், ” ‘அயோத்தி’ படத்திற்குப் பிறகு…
Read More