பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான, சமூக வேர்களைக் கொண்ட, தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது. குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டனின் அடுத்த படமாகவும் மக்கள் காவலன் அமைகிறது. மேலும், தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார். இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்”,…

Read More

உள்ளடக்க உருவாக்கம் முதல் வணிகமயமாக்கல் வரை இந்திய திரைப்படத் துறைக்கான தேசிய B2B சந்தையை உருவாக்கும் புதிய முயற்சி

இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கங்களை வணிகமயமாக்கும் நோக்கில், Producer Bazaar முன்னெடுக்கும் Discovery Film Market (DFM), ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF)-வின் முக்கிய அங்கமாக இந்த ஆண்டு அறிமுகமாகிறது. படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், OTT தளங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்களை ஒரே தொழில்முறை வணிகச் சூழலில் இணைக்கும் தேசிய அளவிலான B2B திரைப்பட சந்தையாக இது உருவாகியுள்ளது. BISFF மேடையில் Producer Bazaar-ன் தேசிய முன்னெடுப்பு: ஆகஸ்ட் 15 மற்றும் 16 (சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் Producer Bazaar Discovery Film Market, இந்திய திரைப்படத் துறையின் படைப்பாற்றலுக்கும் வணிகத்திற்கும் இடையிலான…

Read More

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘ஷம்பாலா’ திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான ‘கரிகாலா’ மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ‘கரிகாலா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களை ஒரு பிரம்மாண்டமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. அடர்ந்த மர்மக் காட்டில், கையில் வாளை உயர்த்தியபடி வீரராக குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து…

Read More

‘யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது

யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா, இன்று (04.08.2026) சென்னையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் முத்துக்குமார், புகழ், சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ், பவேல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மதன் துரை இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர் விஜய் டிவியில், அது இது எது, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், சிக்ஸர், சட்டம் என் கையில் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஒளிப்பதிவை பி.ஜி. முத்தையா மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், கலை இயக்குநராக தினேஷ் குமார் பணியாற்றுகின்றனர். ஸ்டண்ட் இயக்குனராக கணேஷ் பணியாற்ற, தயாரிப்பு நிர்வாக பணியை இரா.குமரேசன் மேற்கொள்கிறார்.…

Read More

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ இன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நடிகர்கள் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகிறது. நடிகர் முரளி, “இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியமான படம் இது. இதில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வரும் ஏழாம் தேதி திரையரங்குகளில் சென்று கண்டிப்பாக படம் பாருங்கள். தயாரிப்பாளர்கள், மேடி சார், இயக்குநர் கிருஷ்ணகுமார் என அனைவருக்கும் நன்றி”. ஜி.டி. ராஜ்குமார், “இது சினிமாவாக விதை போட்டவர் அரவிந்த்தான். அவர்தான் எனக்கு கிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார். கதையய் பாட்காஸ்ட்டாக கிருஷ்ணா கொண்டு வந்தார். ஏற்கனவே சிலர்…

Read More

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல் உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த…

Read More