தயாரிப்பாளர் திருமலை சிவம் அவர்கள் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆகன்யா’. இப்படத்தை இயக்குநர் ஜவஹர் பரமசிவம் இயக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் – ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், பிரம்மாண்ட பொருட்செலவில் பிரபல IT நிறுவனங்கள் மற்றும் மால்களில் படமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சியமைப்பிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் நாயகிகளாக சுப்ரா அய்யப்பா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். இதில் சுப்ரா அய்யப்பா முழுநீள ஆக்ஷன் நாயகியாக தோன்றி, சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே தனது சாதுர்யமான கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவரவுள்ளார்.

படத்தில் இடம்பெறும் இரண்டு குத்துப் பாடல்களில் ஒன்றில் ஸ்ருஷ்டி டாங்கே உற்சாகமான நடனத்தால் சிறப்பாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் இடம்பெறும் காதல் பாடலுக்கு கவிஞர் பா.விஜய் வரிகள் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சுபாஷ் சந்திரன் (USA) இசையமைத்துள்ள இந்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஆகன்யா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தொழில்நுட்பக் குழு
* தயாரிப்பு : திருமலை சிவம்
* இயக்கம் : ஜவஹர் பரமசிவம்
* ஒளிப்பதிவு : கதிரவன்
* இசை : சுபாஷ் சந்திரன் (USA)
* படத்தொகுப்பு : விக்னேஷ் குமார் PG

