மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”;

தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பாக மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடலை ரசிகர்களுக்கு வழங்குகின்றனர். இந்தப் பாடலை, தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து பாடியுள்ளார் மற்றும் கென் ராய்சன் இயக்கியுள்ளார். இந்தப் பாடல் விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும். மேலும், மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் இந்த ‘மன்னாரு’ பாடல், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆகஸ்ட் 8 இன்று முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியானது. இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மன்னாரு’ பாடல், புதிய இசைப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமையும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். …

Read More

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் *ONE MAN* திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை…

Read More

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர்: மனதிற்கு இதமான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்கிறது

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் – ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்… வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான…

Read More

10 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10; ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழாவிற்கு ரசிகர்களை வரவேற்கும் விஜய் சேதுபதி

சென்னை, ஆகஸ்ட் 07,2026: பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், பிக்பாஸ் தமிழ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தாண்டி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அனுபவமாக வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும் 100 நாட்கள் குடும்பங்களை ஒன்றிணைத்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பரவலான உரையாடல்களை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒரு கலாச்சார நிகழ்வாக இது மாறியுள்ளது. 10வது சீசனை முன்னிட்டு, கடந்த ஒரு தசாப்தமாக பிக்பாஸை வெற்றிப் பாதையில் வழிநடத்திய ரசிகர்களுக்கு “பத்தாண்டு வாழ்த்துகள்” தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்காகவே உருவான ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட பொழுதுபோக்கு கொண்டாட்டமாக அமைகிறது. இந்த லாஞ்ச் புரோமோ, பிக்பாஸ் ஒரு…

Read More

‘செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது: “இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.…

Read More